திமுகவுக்கு படையெடுக்கும் மாற்றுக்கட்சி தலைகள்.. 100+ எஸ்டிபிஐ கட்சியினர் திடீர் முடிவு!
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சி மாறும் படலங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
தென்காசி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் திமுகவில் இணைந்த இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலையொட்டி, தங்களுக்கான ஆதரவு தளத்தை விரிவுபடுத்துவதில் அனைத்துக் கட்சிகளுமே தீவிரம் காட்டி வருகின்றன.
மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கட்சி தாவும் படங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மைக்காலமாக அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் திமுகவில் இணைந்தனர். அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், மைத்ரேயன், சின்னச்சாமி என அதிமுக பிரமுகர்கள் பலர் அண்மையில் திமுகவில் இணைந்தனர்.
மேலும், ஈரோடு மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத நபராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் தவெகவில் இணைந்தார். அவருடன் அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா உள்ளிட்ட பலரும் தவெகவில் இணைந்தனர். நாஞ்சில் சம்பத் அண்மையில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் மாற்றுக் கட்சியினர் கட்சி தாவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை தங்கள் பக்கம் சேர்த்து வருகிறது.
அந்த வகையில், தென்காசியைச் சேர்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் 100 பேர், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம், அதிமுக கூட்டணியில் இருந்து எஸ்டிபிஐ கட்சி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications