வரப்போகுது டபுள் டெக்கர் ரயில்! பயணிகள் ரயிலில் சரக்குகளும் போகும்! ரயில்வேயின் மேஜர் பிளான்
சென்னை: நமது நாட்டில் தற்போது சரக்கு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் தனித்தனியாக இயக்கப்பட்டு வருகின்றன. விரைவில் ஒரே நேரத்தில் பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையிலான, 'டபுள் டெக்கர்' ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த டபுள் டெக்கர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்து அமைப்பாக ரயில்வே உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் கோடிக்கணக்கான பயணிகள் தங்கள் பயண தேவைக்கு ரயில்வேயைத்தான் சார்ந்து இருக்கிறார்கள்.

டபுள் டெக்கர்: ரயில்வேயில் தற்போதைய கால கட்டத்திற்கு நவீன வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் வந்தே பாரத் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. தற்போது, சரக்குகளை கையாள தனி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தான் ஒரே நேரத்தில் பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்லும் வகையில் புதிய "டபுள் டெக்கர்" ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ஆர்சிஎஃப்: குஜராத்தின் கபுர்தலாவில் உள்ள ரயில்வே கோச் ஃபேக்டரி (RCF) யில் இந்த ரயில்வே பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட இருப்பதாகவும் ரயில்வே வட்டார தகவல்கள் கூறுகின்றன. இரண்டு அடுக்குகள் வடிவமைப்பு கொண்ட இந்த கார்கோ ரயிலின் முதல் அடுக்கில், 6 டன் வரை எடையுள்ள சரக்குகள் ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்கில் ஒரு பெட்டியில் 46 பயணிகள் பயணிக்க முடியும்.
ஒரு பெட்டிக்கு 3 கோடி செலவு: பயணிகள் ரயிலுடன் சரக்குகளை கொண்டு செல்லும் போது விரைவாக கொண்டு சேர்க்க வேண்டிய சரக்குகளை எளிதில் கொண்டு செல்ல முடியும் என்பதால் இது மக்களுக்கு பயனளிக்க கூடியதாக இருக்கும் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள். இந்த டபுள் டெக்கர் பெட்டிகளை தயாரிக்க பெட்டிக்கு ரூ.2.70 கோடி முதல் ரூ.3 கோடி வரை செலவு ஆகும்.
வந்தே சரக்கு ரயில்: இது மட்டும் இன்றி வந்தே பாரத் ரயில்களை போல, வந்தே கார்கோ என்ற பெயரில் தனியாக சரக்கு ரயில் பெட்டிகளும் விரைவில் தயாரிக்கப்பட இருக்கிறது. இந்த வந்தே சரக்கு ரயிலில், பழைய சரக்கு ரயில்களை போல் அல்லாமல் முற்றிலும் லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் பெட்டி வடிவமைப்பும் ரயில்களின் திறனும் இருக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். இந்த வந்தே சரக்கு ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வரை வேகமாக செல்லக்கூடியதாக இருக்கும் எனவும் இதனால், சரக்கு போக்குவரத்து விரைவாக நடைபெறும்.
28 சதவிகிதம்: இதன்மூலம் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள். ரயில்வேக்கு கடந்த நிதி ஆண்டில் சரக்கு போக்குவரத்து 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2024 நிதி ஆண்டில் மட்டும் 1,591 மில்லியன் டன்கள் வரை சரக்குகளை கையாண்டுள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமான சரக்கு போக்குவரத்தில் 28 சதவீதம் ரயில்வேயே தீர்த்து வைப்பதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications