சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போன வருடத்தைவிட இந்த வருடம் ரொம்பவே மோசம்... பைக், கார் விற்பனை பெரும் சரிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Ashok Leyland closes Chennai Ennore unit for 16 days

    சென்னை: 1997-1998ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வாகனங்கள் விற்பனை மிக கடுமையான சரிவினை சந்தித்துள்ளது. நான்கு சக்கர பயணிகள் வாகன விற்பனை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும் போது 41 சதவீதம் சரிவடைந்துள்ளது.

    பொருளாதார மந்த நிலை காரணமாக பயணிகள் வாகனங்கள் விற்பனை 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. 1997-1998ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பயணிகள் நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை கடும் சரிவினை சந்தித்துள்ளது. நாட்டில் இருசக்கர வாகனங்கள் விற்பனையும் 3 ஆண்டுகளில் இல்லாத சரிவினை சந்தித்துள்ளது.

    கடந்த 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 287,198 வாகனங்கள்( ஒட்டுமொத்த பயணிகள் வாகனங்கள்) விற்ற நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 196,524 ஆக சரிவினை சந்தித்துள்ளது.இதன்படி ஒட்டு மொத்த பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.57 சதவீதம் சரிந்துள்ளது.

    புலிகள் ஒழிக்கப்பட்ட நாள்தான் எனக்கு மிக முக்கியமான நாள்: முத்தையா முரளிதரன் சர்ச்சை பேச்சுபுலிகள் ஒழிக்கப்பட்ட நாள்தான் எனக்கு மிக முக்கியமான நாள்: முத்தையா முரளிதரன் சர்ச்சை பேச்சு

    41 சதவீதம் சரிவு

    41 சதவீதம் சரிவு

    மிக மோசமான சரிவு என்றால் பயணிகள் கார் விற்பனையில் தான். கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 196,847 ஆக இருந்த நிலையில், 115,957 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நான்கு சக்கர பயணிகள் வாகனங்கள் விற்பனை 41.09 சதவீதமாக குறைந்துள்ளது.

    2 சதவீதம் சரிவு

    2 சதவீதம் சரிவு

    சரக்கு வாகனங்கள் விற்பனை கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 73,085 ஆக இருந்த நிலையில், 71,478 ஆக குறைந்துள்ளது. இது 2 சதவீத சரிவு ஆகும்.

     47 சதவீதம் சரிவு

    47 சதவீதம் சரிவு

    மறுபக்கம் வேன் விற்பனை பிரிவு கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 47.36 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17,266 வேன்கள் விற்ற நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9,089 வாகனங்கன் தான் விற்றுள்ளது.

    22 சதவீதம் சரிவு

    22 சதவீதம் சரிவு

    இருசக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 22.24 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,947,304 இருசக்கர வாகனங்கள் விற்ற நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1,514,196 இருசக்கர வாகனங்கன் தான் விற்றுள்ளது.

    English summary
    Passenger Vehicle Sales See Worst- ever drop in August since 1998. Passenger car sales dropped 41 per cent in this August 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X