மதபோதகர் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன்.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கோவை மத போதகர் ஜான் ஜெபராஜ் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஜான் ஜெபராஜுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். இவர் கடந்த சில வருடங்களாக கோவையில் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். ஜான் ஜெபராஜ் காந்திபுரம் பகுதியில் உள்ள பிரார்த்தனை கூடத்தில் மத போதகராக இருந்து வந்தார்.

நவீன வடிவில் கிறிஸ்தவ மத பாடல்களை உருவாக்கி அதன் மூலம் பிரபலமானார். சமூகவலைதளங்களிலும் இவரை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர். கடந்த 2024 ஆம் வருடம் ஜான் வீட்டில் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் அவரின் மாமனார் தன்னுடைய வளர்ப்பு மகள் உள்ளிட்ட 2 சிறுமிகளை அழைத்து சென்றுள்ளார்.
அவர்களுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிறுமிகளின் புகாரின் அடிப்படையில் ஜான் ஜெபராஜ் மீது கோவை மாநகர அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜான் ஜெபராஜ் தலைமறைவானார். அவர் வெளிநாடு தப்பாமல் இருக்க விமான நிலையங்கள், துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.
மேலும் முன் ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து கேரள மாநிலம், மூணாறில் தங்கியிருந்த ஜெபராஜை காவல்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜான் ஜெபராஜுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
மறுபக்கம் அது அவருக்கு விரிக்கப்பட்ட சதி வலை என்று அவரின் ஆதரவாளர்கள் ஜானுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் ஜான் ஜெபராஜ் உறவினர் பெனெட் ஹாரிஷ் என்பவரையும் கடந்த மாதம் கோவை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில் ஜான் ஜெபராஜ் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த மே 8 ஆம் தேதி நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இந்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர். இந்நிலையில் ஜான் ஜெபராஜின் ஜாமீன் மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை சார்பில் ஜானுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. ஜான் தரப்பில், "நானும், என் மனைவியும் பிரிந்து வாழ்கிறோம். குடும்ப பிரச்னை காரணமாக குழந்தைகள் மூலம் தவறான புகார்களை கொடுத்துள்ளனர். இதில் உள்நோக்கம் உள்ளது. காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்." என்று வாதிட்டனர்.
இதை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம், ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அவர் கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தினசரி கையெழுத்திட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications