பட்டா மாறுதல்.. வீட்டிலிருந்தே ஆன்லைனில் "பட்டா" மாறுதல் செய்ய முடியுமா? இதோ தமிழக அரசு சூப்பர் வசதி
சென்னை: அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் பல துறைகளின் சேவைகள் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தவகையில் பட்டா மாறுதலும் ஆன்லைனில் ஆரம்பமாகி உள்ளது.
பட்டா என்பது வீடு, நில உரிமையாளர்கள் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணமாகும். ஒரு நிலத்தின் உரிமையை சுட்டிக்காட்டும் இந்த ஆவணத்தை வருவாய் துறை வழங்குகிறது... இந்த ஆவணத்தில், ஓனரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி குறித்த விவரங்கள் இருக்கும்.

நில ஓனர்கள்: நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து, அவை ஆன்லைனில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பிறகு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.
எனினும், இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் பட்டா விண்ணப்பம் செய்வதற்கு கால விரயம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.. சரியான ஆவணங்கள் அங்கு கொண்டு செல்லாவிட்டால், சில நேரங்கள் பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்ய ஒரு நாள் கூட ஆகிவிடுகிறது.
பட்டா மாறுதல்: இப்படிப்பட்ட சூழலில்தான், முதல்வர் ஸ்டாலின், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் "எங்கிருந்தும் எந்நேரத்திலும்" என்ற இணையவழி சேவையின் மூலமாக பொதுமக்கள் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
மேலும் பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in/citizen/என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தொடங்கி வைத்தார்.. ஆன்லைன் மூலம் பட்டா மாற்றுவதில் என்னென்ன வசதிகள் உள்ளன தெரியுமா?
வசதிகள்: இந்த ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் தேவையில்லாமல் அலைய தேவையில்லை... நேரம் மிச்சமாகும்.. சரியான ஆவணங்களை வழங்குவதால், உடனடியாக பட்டா மாறுதலும் உடனடியாக செய்யப்படும். இதில் இடைத்தரகர்களுக்கும் வேலையில்லை.. இந்த இணையதளத்தில் எப்படி பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்வது தெரியுமா?
பட்டா மாறுதலுக்கான ஆவணங்கள் (ஏதாவது ஒன்று):
- கிரையப் பத்திரம்
- செட்டில்மெண்ட் பத்திரம்
- பாகப்பிரிவினை பத்திரம்
- தானப்பத்திரம்
- பரிவர்த்தணை பத்திரம்
- விடுதலை பத்திரம்
ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை குடியிருப்பு ஆவணங்கள் (ஏதாவது ஒன்று) ஆதார் அட்டை, தொலைப்பேசி ரசீது, மின் கட்டணம், சமையல் எரிவாயு ரசீது, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை

எப்படி பட்டா மாற்றுவது: முதலில் www.tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே மனு செய்யலாம். இந்த வெப்சைட்டிற்கு சென்றதுமே, உங்களது பெயர், செல்போன் நம்பர், இ-மெயில் அட்ரஸ் தந்து பதிவு செய்ய வேண்டும். பிறகு, பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டியது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு, உங்களது சுயவிவரங்களையும், நிலத்தின் விவரங்களையும் பதிவிட வேண்டும். அதாவது, அது எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே நம்பர் மற்றும் சப்-டிவிஷன் நம்பர் என பிழையில்லாமல் பதிவு செய்ய வேண்டும்.
அதற்கு பிறகு, சம்பந்தப்பட்ட நிலம் உங்களுக்கு சொந்தமானதற்கு என்ற சான்றான, கிரைய பத்திரம் உள்பட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இறுதியாக, உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு வரிகள் இல்லாமல் ரூ.60-ம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
பட்டா மாறுதல்: இப்போது, உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படும்... அவர் மூலம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்யப்படும்..!!












Click it and Unblock the Notifications