பட்டா பெயர் மாற்றம்.. இனி ரொம்ப ஈஸியாகுது.. தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு
சென்னை: தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்வது அதிகரித்துள்ளது. இதையடுத்து தேவையை சமாளிக்கும் விதமாக புதிதாக 1,231 பொறியாளர்களுக்கு நிலங்களுக்கான பட்டா உட்பிரிவு பணிகளை மேற்கொள்ள நில அளவை உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் முக்கியமானது ரியல் எஸ்டேட்.. அதிலும் குறிப்பாக பத்திரப்பதிவில் தான் அதிக வருவாய் கிடைக்கிறது. சென்னை,கோவை,மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் வீடு, மனை விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் வீடு, மனைக்கான பத்திரம் மாற்றுவோர், கையோடு பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் அரசிடம் விண்ணப்பிப்பார்கள், அதற்கான விண்ணப்பங்கங்கள் வழக்கத்தைவிட கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது.

ஒரு நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு அந்த நிலத்தை அளக்க வேண்டியது சர்வேயர் எனப்படும் நிலஅளவையரின் பணியாகும்.. பொதுவாக ஒரு நிலம், வீட்டு மனைகளாக மாற்றப்படும் போது, பல்வேறு பாகங்களாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. அப்படி பல்வேறு பாகங்களாக மாற்றப்படும் நிலங்களாக உட்பிரிவு பட்டாவாக கணக்கிடப்படும். அந்த உட்பிரிபு பட்டா கோரி மக்கள் விண்ணப்பிக்கிறார்கள். இதனை சம்பந்தப்பபட்ட ஊராட்சியின் அல்லது நகராட்சியின் நில அளவையாளர் நேரில் சென்று அளந்து, எல்லைகளை வரையறுக்க வேண்டும்.
இதனிடையே தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு பகுதிகளில், குறுவட்ட நிலையில் நில அளவர்கள் இருக்கிறார்கள்.கிராமத்துக்கு ஒருவர் வீதம் நில அளவர் இருந்தால் மட்டுமே, இப்பணிகளை விரைந்து முடிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. நிலத்தை அளக்கும் நில அளவையர்கள் போதிய அளவில் இல்லாமல் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.
நில அளவையர் பணியாளர் பற்றாக்குறை காரணமாக, நில அளவை பணியில் உரிமம் அடிப்படையில், வெளியாட்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டிரக்கிறது.. இதற்காக, கட்டுமான பொறியியல் பட்டதாரிகளுக்கு, நில அளவை பணி குறித்த பயிற்சி அளித்து, உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, 1,231 பேருக்கு நில அளவை பணிக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், தாலுகா அளவில் பணி புரிய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். உட்பிரிவு கோரி வரும் கோப்புகளில், சம்பந்தப்பட்ட நிலத்தை அளக்க இவர்கள் பயன்படுத்தப்படுவர் என்று அரசு அதிகாரிகள் கூறினார். முடிக்கப்படும் கோப்புகள் எண்ணிக்கை அடிப்படையில், இவர்களுக்கான தொகை வழங்கப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
நில அளவை பணிக்கு பொறியாளர்களை உரிமம் அடிப்படையில் செயல்பட அரசு அனுமதி அளித்திருப்பது பலரும் வரவேற்கார்கள்.. சரி நில அளவை பணிக்கு உரிமம் எப்படி பெறுவது? இதற்கு நில அளவை மற்றும் நிலவரித்துறை இயக்குனர் ஒருமுறை வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவத்தினல் மூன்றாண்டு டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நில அளவை செய்வதற்கான உரிமம் பெறுவதற்குரிய 3 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயற்சி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிலஅளவைப் பயிற்சி நிலையம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் இருக்கிறது.
நில அளவையர்கள் குறைந்த அளவில் இருந்த காரணத்தில் தான் பட்டா பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இப்போது நில அளவையர்களுக்கு புதிதாக உரிமம் கொடுக்கப்பட்டிருப்பதால் இனி பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிப்போர், குறிப்பாக உட்பிரிவு பட்டாவிற்கு விண்ணப்பிப்பது அல்லது உட்பிரிவு பட்டா பெயர் மாற்றம் செய்வது எளிதாகும். அதேநேரம் பட்டா பெயர் மாற்றம் விவகாரத்தில் லஞ்சமே வாங்க முடியாத அளவிற்கு வெளிப்படைத்தன்மையையும், விதிமுறைகளையும் அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications