நிலத்தை வைத்திருப்போர் அறிய வேண்டியது.. பட்டாவில் இத்தனை வகைகள் இருக்கா? அடடே, பெயிரா கலக்குதே
சென்னை: பட்டா என்றால் என்ன? பட்டாவில் உள்ள வகைகள் என்னென்ன? தூசி பட்டா, கூட்டுப்பட்டா, தனிப்பட்டா என்றால் என்ன? இவைகளின் பயன்பாடுகள் என்னென்ன என்பது குறித்து, விழிப்புணர்வு பதிவு ஒன்றை பெயிரா வெளியிட்டுள்ளது. அது என்ன?
பட்டாவில் பல வகைகள் உண்டு.. இதுகுறித்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனரும், தேசியத் தலைவருமான டாக்டர் ஹென்றி ஆறுமுகம் விரிவாக கூறியிருக்கிறார்.

கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை சார்ந்தோருக்கும், பொது மக்களுக்கும் பட்டா குறித்த தகவல்களை விழிப்புணர்வு பதிவாக தன்னுடைய FAIRA முகநூல் பக்கத்தில் இதனை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் டாக்டர் ஹென்றி. அவரது பதிவில் உள்ளதாவது:
பட்டா என்றால் என்ன: பட்டா என்பது நில உடமை பதிவேடு அல்லது நில உடமை ஆவணமாகும். யார் பெயரில் சொத்து இருக்கிறதோ அவரே தற்போதைய நில உரிமையாளர் ஆவர். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரித்தொகை, எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை அல்லது கணவர் பெயர் இருக்கும்.
ஒருவேளை நிலம் நிறுவனத்தின் பெயரில் இருந்தால் பட்டா நிறுவனத்தின் பெயரில் இருக்கும். கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பும் அதில் இருக்கும். பட்டாக்களின் வகைகளை பார்ப்போம்.
1. யுடிஆர் பட்டா: (UDR Data Registry):
நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வே செய்து அனைத்து கிராம நிலங்களுக்கும் சென்று (#நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரணை செய்து (வீட்டில் உள்ள ஆவணங்கள், புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்றது என பிரித்து, நம்முடையது எது? பிறருடையைது எது? என ஒழுங்குப்படுத்தி) மிக பெரிய அளவில் 1979முதல் 1989 வரை தமிழகம் முழுவதுமாய் யு.டி.ஆர். பட்டா (Updating Data Registry ) கணக்கெடுத்து அதனை கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள்.
அதாவது மேனுவல் ஆவணங்கள் கணினி மயமானது முதல் இப்பொழுது வரை இதனை தான் பட்டா ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இப்போது எல்லாம் ஆன்லைனில் ஏற்றப்பட்டு விட்டது. மேனுவல் பட்டா (Manuel_Patta) இப்பொழுது நடக்கும் சொத்து பரிவர்த்தனைகளுக்கான #பட்டா பெயர் மாற்றங்கள் சர்வே எண் உட்பிரிவுகள் பெரும்பாலும் இந்த பட்டாவின் அடிப்படையில் தான்தான் நடக்கிறது.
2. தோராய பட்டா & தூய பட்டா:
தோராய பட்டா மற்றும் தூய பட்டா இரண்டும் ஒத்த தன்மை கொண்டது தான். பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் அடிப்படைகள் ஆகியவற்றின் காரணமாக அங்கு வசித்து வருபவர்களுக்கு தோராய மற்றும் தூய பட்டா அரசால் வழங்கப்படுகிறது.
தோராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டாவாக அளிக்கப்படுவதாகும். சாலைகள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளை தக்க முறையில் ஆவணப்படுத்தி, நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்த அந்த நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்குவதன் மூலம் நிலம் வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படுகிறது.
மேற்கண்ட பட்டாவில் உள்ள பெயர்கள், அளவுகள் ஆகியவற்றில் திருத்தங்கள் கண்டறியப்பட்டு அவை தெரிவிக்கப்படும் நிலையில் தக்க திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் எனஎன்ற அடிப்படையில் அது தோராய பட்டா என்று குறிப்பிடப்படுகிறது. பிழைகளை திருத்துவதற்க்கு கால அவகாசம் கொடுத்து வழங்கும் பட்டா, "தோராய பட்டா".. இது ஒரு தற்காலிகமான பட்டா!
தூய பட்டா : மேற்கண்ட தோராய பட்டா பெற்றவர்கள் அதில் அளவு பிழைகள் மற்றும் திருத்தங்கள் ஏதாவது இருக்கிறதா..? என நிலத்தை அளந்து சரி பார்த்து தகவலை தெரிவிக்கவேண்டும். அதன் பின்னர் முழு விவரங்களுடன் திருத்தங்கள் சரி செய்யப்பட்டு நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா அளிக்கப்படும்.
இந்த இரண்டு பட்டாக்களும் 'மேனுவலாக' தயார் செய்யப்படுவதுடன், பட்டாவின் பின்னால் தக்க அளவுகளுடன் நிலத்தின் வரைபடமும் இருக்கும். தோராய பட்டா பெறப்பட்ட குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பிழைகள் திருத்தப்பட்ட தூய பட்டாவை பெற்றுக்கொள்வது அவசியம்.
3. ஏடி கண்டிசன் பட்டா- AD Assignment Land(Adi Dravidar)
உபரியாக இருக்கும் நிலத்தை மனைகளாக பிரித்து நிலமில்லாத பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படுவது ஏடி கண்டிசன் பட்டா எனப்படும். இந்த கண்டிசன் பட்டாவில் உள்ள நிலத்தை குப்பிட்ட காலத்திற்கு யாருக்கும் விற்க கூடாது போன்ற கண்டிசங்கள் இருக்கும். இதில் பட்டா பெறுபவரின் புகைப்படமும் தனி வட்டாசிரியரின் கையொப்பமும் இடம் பெற்றிருக்கும். இது மேனுவல் பட்டாவாக இருக்கும். இதில் பெண்களின் பெயரில்தான் பட்டா வழங்கப்படும். மேலும் விவசாயம் செய்வதற்கு நிலமில்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒதுக்கப்படும்.
4. நில ஒப்படை பட்டா (Assignment patta)
வீட்டு மனைகள் ! விவசாய நிலங்களை பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து பிரிவினருக்கும் அரசு இலவசமாக ஒப்படைப்பது ஒப்படை பட்டா ஆகும்! குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் , பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள், மூன்றாம் பால் இனத்தவர்கள் போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடுக்கும் அதனை நில ஒப்படை பட்டா என்பர்.
இவற்றிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள் பிறருக்கு விற்க கூடாது என்று கண்டிசன்கள் இருக்கும். குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் வருவாய் துறையில் தடையின்மை சான்று பெற்றுத் தான் பிறருக்கு விற்பனை செய்யும் வகையில் நிபந்தனை இருக்கும். இதனை டி.கார்டு கண்டிசன் பட்டா என்றும் சொல்லுவர்.
5. டிஎஸ்எல்ஆர் பட்டா (TSLR PATTA = Town Survey Land Record)
கிராம விவசாய நிலத்தை பட்டா என்ற ஆவணம் மூலம் பெறப்படுகிறது. கிராமபுற விவசாய நிலத்தை தவிர நகரத்தில் உள்ள நிலத்தின் அளவு மற்றும் பதிவு ஆவணம் பற்றிய விவரக்குறிப்புகள் உள்ள TSLR Town Survey Land Record மூலம் பட்டாவாக கொடுக்கப்படுகிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நிலங்களை துல்லியமாக சர்வே செய்து அங்கு குடியிருக்கும் மக்களுக்கு வழங்கப்படும். TSLR பட்டா எடுக்க நகரம் பிளாக் மற்றும் வார்டு போன்ற பிரிவுகளில் இருக்கும்.
கிராம பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும் நகர பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும், இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நகர பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்பு மிக்கது. அதனால் ERROR மிக மிக குறைந்தே இருக்கும். ஆனால் கிராம பகுதி சர்வேகளில் தோராயமாக ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதல் குறைதல் இருக்கலாம். அதனால் அதிக துல்லியமும் , எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக்கள் செய்யபடுகிறது.
6. 2C பட்டா- மர பட்டா - தூசு பட்டா
கிராம கணக்கில் 2 ம் நம்பர் புக்கில் "C" பதிவேட்டில் கொடுக்கும் பட்டா 2C பட்டா ஆகும். ஆனால் பேச்சு வழக்கில் 2C பட்டா மருவி தூசி பட்டா என்று அழைக்கப்படுகிறது. அரசு நிலத்தில் உள்ள புளியமரங்கள், பனை மரங்கள் போன்ற கனிதரும் மரங்களை பராமரிக்கவும் அவற்றை அனுபவிக்கவும் ஒருவருக்கு உரிமையளித்து பட்டா வழங்கப்படும். இதுவே 2C பட்டாவாகும். 2C பட்டாவானது 2ம் நெம்பர் கிராம கணக்கு புத்தகத்தில் C பதிவேட்டில் குறிக்கப்பட்டிருக்கும். இதுவே 2C பட்டாவாகும். இதை மர பட்டா எனவும் அழைக்கப்படும். மேலும் இதை பேச்சு வழக்கில் தூசு பட்டா எனவும் அழைப்பர்.
7. கூட்டு பட்டா (joint patta)
கூட்டு பட்டாவில் ஒன்றுக்கு மேற்பட்ட நில உரிமையாளர்கள் இருப்பார்கள். ஆனால் யார் யாருக்கு எவ்வளவு நிலம் உள்ளது என்று தெரியாது. யார் நிலம் எங்கு உள்ளது என்று தெரியாது. ஒருவருக்கு அதிகமாகவோ மற்றவர்கள் குறைந்த அளவிலோ நிலம் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான பட்டாவே இருக்கு. அனைவர் பட்டாவிலும் அனைவர் பெயரும் இருக்கும்.
உட்பிரிவு செய்யாமல் உள்ள நிலத்தில் உள்ள அனைவரும் உள்ளடக்கிய பட்டா கூட்டு பட்டாவாகும். பட்டாவே இல்லாமல் இருப்பதற்கு கூட்டு பட்டா சிறந்தது, கூட்டு பட்டாவை விட தனிப்பட்டா சிறந்தது.
8. தனி பட்டா (Individual Patta)
தனிபட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும் . இந்த பட்டாவில் சர்வே நெம்பர் உட்பிரிவு நெம்பர் ஆகியவை தனியாக இருக்கும். தனிப்பட்டா நில உரிமை ஆவணத்தின் தன்மையில் தனியொருவருக்கு பதியப்பட்டதாகும். இதில் பட்டா நம்பர், சர்வே நம்பர், உட்பிரிவு, நிலத்தின் அளவு, FMP வரைபடம் ஆகியவை தெளிவாக இருக்கும்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications