விஜய்யிடம் நான் பேசினேனா? அவரை பார்த்தே 20 வருஷம் ஆகுது.. போட்டு உடைத்த பவன் கல்யாண்
சென்னை: விஜய்யை என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக பவன் கல்யாணை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் பரவியது. இந்த நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யான் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். விஜய்யை சந்தித்தே 20 வருஷங்கள் ஆகிறது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன் என்பதால் உண்மையில்லை. இந்த தகவல் எப்படி பரவியது என்றே எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய்யை அதிமுக - பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தலைமை தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக பரவலாக பேசப்படுகிறது. சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லி சென்ற நிலையில், பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும் பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான இந்தியா டுடே செய்தி வெளியிட்டு இருந்தது.

என்.டி.ஏ கூட்டணியில் விஜய்?
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு 80 தொகுதிகளில், கூட்டணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியும், ஒருவேளை மிக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றால் எதிர்க்கட்சி தலைவர் பதவி வகிக்கலாம் என்று கூட விஜய்க்கு ஆஃபர் வழங்கியதாக தகவல் வெளியானது.
இதற்காக விஜய்யிடம் பல்வேறு வழிகளிலும் பாஜக மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், தென்னிந்தியாவை சேர்ந்த துணை முதல்வர் ஒருவர் இதற்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் என்றும் அவர் நேரடியாக விஜய்யிடம் பேசியதாகவும் கூறப்பட்டது.
பவன் கல்யாண் பதில்
திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை பிரிந்தால் தேசிய ஜனநாயாக கூட்டணி வெற்றி பெறுவது கடினம் என்பதால், எந்த வாய்ப்பையும் விடக்கூடாது என்பதில் பாஜக தலைமை சீரியஸ் ஆக இருப்பதாகவும், இதற்கு விஜய்யின் தவெக சம்மதித்ததாகவும் தகவல் வெளியானது. எடப்பாடி பழனிசாமி தான் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் கூட்டணி உறுதியாகும் எனவும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் நான் விஜய்யிடம் பேசியே 20 வருஷங்கள் ஆவதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற பவன் கல்யாணிடம் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டன. "கடந்த ஒரு வாரமாக ஒரு செய்தி பரவி வருகிறது. என்.டி.ஏ கூட்டணியில் இணைய விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்துனீர்களா? என கேட்கப்பட்டது.
விஜய்யை சந்தித்தே 20 ஆண்டு ஆச்சு
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நான் பேசவே இல்லை. நானும் அந்த செய்தியை கேள்விப்பட்டேன். எதற்கு இப்படி அந்த செய்தி பரவியது என்றே தெரியவில்லை... நான் விஜய்யை சந்தித்தே 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. சமீபத்தில் நான் விஜயிடம் பேச வில்லை. எங்களுக்குள் எந்தவித தொடர்பும் இல்லை" என்று கூறினார்.
இதேபோல் என்.டி.ஏ கூட்டணி தான் இப்போதைய நேரத்திற்கு விஜய்க்கு சரியான இடமாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பவன் கல்யான், "எனக்கு தெரியவில்லை. கூட்டணி என்பது கட்சி தலைவர்களை மட்டும் கொண்டது கிடையாது. அது அவர்களின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் ஆதரவால் அமைவது. எனவே அது தனிப்பட்ட விஷயம் கிடையாது" என பதில் அளித்தார்.
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications