Tamilisai-யை இடித்து தள்ளிய பாதுகாவலர்! சட்டென முகம் மாறிய தமிழிசை! பவன் கல்யாண் செய்தது என்ன?
மதுரை: மதுரை விமான நிலையத்தில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் இசட் பிரிவு பாதுகாவலர் ஒருவர் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனை இடித்து தள்ளிவிட்டுச் சென்ற போது தமிழிசைக்கு சட்டென முகமே மாறிவிட்டது. அடுத்து பவன் கல்யாண் செய்தது என்ன தெரியுமா?

மதுரையில் முருக பக்தர்கள் கலந்து கொள்ளும் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதை இந்து முன்னணி நடத்துகிறது. இந்த மாநாட்டில் அறுபடை வீடுகளின் மாதிரிகளும் காட்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் பார்க்கும் பக்தர்கள் பக்தி பரவசம் அடைகிறார்கள்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். காலை 10.10 மணிக்கு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
விமானம் புறப்படவிருந்த கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் வேறொரு விமானத்தில் அவர் புறப்பட்டார். அது போல் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வரவிருந்த விமானமும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வரவிருந்த விமானத்தில் கோளாறு என தகவல் வெளியானது. இதையடுத்து அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வேறொரு விமானத்தில் வந்திருந்தார்.
இந்த நிலையில் பவன் கல்யாணை வரவேற்று மாநாட்டுக்கு அழைத்துச் செல்ல தமிழிசை வந்திருந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் இருந்து தமிழிசை, பவன் கல்யாண் தங்கள் பாதுகாப்பு படையினருடன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கட்டத்தில் திடீரென பவனின் இசட் பிரிவு பாதுகாவலர் ஒருவர் ஒதுங்கி செல்வதாக நினைத்துக் கொண்டு செல்லும் போது தமிழிசையை இடித்து தள்ளினார். அப்போது சட்டென முகம் மாறிய தமிழிசை, "ஏன் இப்படி" என்பது போல் கையசைத்தார்.
இதை பவன் கல்யாண் கவனித்துவிட்டு அந்த அதிகாரியை கடிந்து கொண்டு தமிழிசையை அருகில் அழைத்து வந்து பத்திரமாக விமான நிலையத்திற்கு வெளியே இருந்த காரில் ஏற்றி அனுப்பினார். அது போல் அந்த கார் பின்னாலேயே பவனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரும் மாநாட்டு இடத்திற்கு சென்றது.
மதுரை பாண்டி கோயில் அருகில் அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. மாநாட்டுத் திடல், அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டில் ஆன்மீக பெரியவர்கள், பாஜக, அதிமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications