தங்கத்தை அடகு வைக்க போறீங்களா? நகைக்கடனில் இந்த தவறுகளை மட்டும் செய்துடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தை அடகு வைப்பது என்பது, பல வீடுகளிலுமே நடக்கக்கூடிய விஷயம்தான்.. திடீரென பணம் தேவைப்பட்டால், தங்க நகைகளை அடகு வைக்க வேண்டிவரும்.. ஆனால், நகையை அடகு கடைக்கு சென்று பணம் வாங்குவதற்கு முன்பு, சில விஷயங்களை தெரிந்துகொள்வது அவசியம். எங்கே அடகு வைத்தால் நல்லது, நகைக்கு எவ்வளவு பணம் கிடைக்கும், வட்டி எவ்வளவு என முன்கூட்டியே தெரிந்துகொண்டால் தேவையில்லாத செலவுகளை தவிர்க்கலாம்.

தங்க நகைகளை வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC), கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் அடகு வைக்கலாம். ஆனால், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான வட்டியோ, கடன் தொகையோ இருக்காது.

Pawning Gold Jewellery

எனவே, குறைந்தது 3 வங்கிகள் அல்லது நகைக்கடன் நிறுவனங்களில் விசாரித்து, நகைக்கு எவ்வளவு கடன் கிடைக்கும், வட்டி எவ்வளவு, வேறு கட்டணங்கள் உள்ளனவா என்று கேட்டுத் தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்.

நகைக்கடன் வங்கிகள்

முடிந்தவரை பொதுத்துறை வங்கிகளிலும் நகைக்கடன் வாங்கிப் பார்க்கலாம். எஸ்பிஐ, கனரா வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

வட்டி குறைவாக இருக்கும் என்ற ஒரே காரணத்துக்காக முடிவெடுக்காமல், மற்ற கட்டணங்களையும் விசாரித்தால் நல்லது. அதேபோல், கடன் காலம் முடிந்ததும் தானாகப் புதுப்பிக்கும் ஆட்டோ ரெனிவல் (Auto Renewal) ஆப்ஷனை தேர்வு செய்வதற்கு முன்பு, அதன் விதிமுறைகளையும் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுமா என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.. முக்கியமாக கடனை எப்போது திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.

வட்டி எவ்வளவு?

குறைந்த வட்டி என்று விளம்பரம் செய்வதை மட்டும் பார்த்து நகையை அடகு வைக்ககூடாது.. வட்டியுடன் சேர்த்து, கடன் வாங்கும்போது வேறு கட்டணங்கள் ஏதாவது வசூலிக்கிறார்களா என்பதையும் விசாரிக்க வேண்டும்..

வட்டியை மாதந்தோறும் செலுத்த வேண்டுமா, கடனை எத்தனை மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும், தாமதமானால் என்ன கட்டணம் வசூலிப்பார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் சேர்த்து பார்த்த பிறகே எந்த நிறுவனத்தில் கடன் வாங்குவது என்று முடிவு செய்ய வேண்டும்.

நகையின் எடை

அதேபோல நகையின் எடையைப் பார்த்து மட்டும் கடன் தொகையை முடிவு செய்ய மாட்டார்கள். தங்கத்தின் தூய்மை, நகையிலுள்ள கற்களின் எடை, நிகர தங்க எடை, அன்றைய தங்க விலை ஆகியவற்றைப் பொறுத்தே நகையின் மதிப்பு கணக்கிடப்படும்.

உதாரணமாக, கற்கள் பதித்த நகையாக இருந்தால், மொத்த எடையிலிருந்து கற்களின் எடையைக் கழித்துவிட்டுத்தான் தங்கத்தின் மதிப்பை கணக்கிடுவார்கள். எனவே, நகையை மதிப்பீடு செய்யும்போது உடனிருந்து, எடை எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அடகு கடை ரசீது முக்கியம்

நகையை அடகு வைத்ததும் ரசீதை மறக்காமல் வாங்கி கொள்ள வேண்டும்.. அத்துடன் அதில் நகையின் எண்ணிக்கை, எடை, கடன் தொகை உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்.. ஒருவேளை ரசீது தொலைந்துவிட்டால், நகையை அடகு வைத்த நிறுவனத்தை அணுகி, அடையாள ஆவணங்களைக் கொடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ளலாம்.

கடன் தொகை

கடன் வாங்கிவிட்டால், அதை எப்படி திருப்பி செலுத்துவது என்பதையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கடனை அடைக்க முடியாமல் போனால், நகையை இழக்கும் அபாயம் ஏற்படலாம். அதனால், தேவைக்கு அதிகமாகக் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

கடனை முழுமையாக செலுத்திய பிறகு நகையை வாங்கும்போது, ரசீதில் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.. நகைகளின் எண்ணிக்கை, எடை, வடிவம் ஆகியவற்றைச் சரிபார்த்த பிறகே பெற்றுக்கொள்ள வேண்டும்.. முக்கியமாக கடன் முடித்ததற்கான ஆவணத்தையும் வாங்கி வைத்து கொள்வது நல்லது..

ஆர்பிஐ குறைதீர் நடைமுறை

ஒருவேளை நகையை திருப்பி வாங்கும்போது, நீங்கள் அடகு வைத்த நகைக்கும் கொடுக்கும் நகைக்கும் வித்தியாசம் இருந்தாலோ, கணக்கில் புரியாத கட்டணங்களைக் கேட்டாலோ, முதலில் நகையை அடகு வைத்த நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம்.. நிறுவனத்தின் குறைதீர் பிரிவில் புகார் அளித்தும் தீர்வு கிடைக்காவிட்டால், அந்த நிறுவனம் ஆர்பிஐ குறைதீர் நடைமுறைக்குத் தகுதியானதா என்பதைப் பார்த்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம்

எப்போதுமே நகையை அடகு வைப்பது எளிது. ஆனால், அதை மீட்பதற்கான திட்டத்தையும் வைத்துக்கொள்வதுதான் முக்கியம். வட்டி, கட்டணங்கள், நகையின் மதிப்பு ஆகியவற்றை முன்கூட்டியே ஒப்பிட்டுப் பார்த்தால், பின்னாளில் ஏற்படக்கூடிய பல சிக்கல்களை ஈஸியாக தவிர்க்கலாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+