ஒரு இஎம்ஐ அதிகமாக கட்டினாலே, லட்சக்கணக்கில் வட்டி குறையும்.. EMI கட்டுறவங்க கண்டிப்பா பாருங்க
சென்னை: ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மாதம் எக்ஸ்ட்ரா இஎம்ஐ செலுத்தினால், உங்களது இஎம்ஐ லட்சக்கணக்கில் குறையும் என்று நிதிநிலை ஆலோசகர்கள் தெரிவித்தனர். உதாரணமாக வீட்டுக்கடன் வாங்கியவர்கள், 25 வருடம் இஎம்ஐ கட்டும் போதும், ஒரு வருடம் ஒரு இஎம்ஐ எக்ஸ்ட்ரா கட்டினாலே 14 லட்சம் பணம் சேமிக்கப்படும் என்கிறார்கள்.
இன்றைக்கு வீட்டுக்கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மாத சம்பளம் வாங்கும் முதல் தலைமுறையின் முதல் கனவே வீடு வாங்குவது தான். சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பெருநகரங்களுக்கு பிழைப்பு தேடி செல்லும் மக்கள் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். வீட்டுக்கடனை பொறுத்தவரை வாங்குவது எளிது. ஆனால் அதை கட்டி முடிப்பது மிக கடினம்.

தங்கள் வாழ்நாளில் 15 முதல் 30 வருடத்தை இஎம்ஐ கட்டவே வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். வேலைக்கு செல்லும் இடத்தில் என்ன பிரச்சனை என்றாலும், அவமானம், வலி, கண்ணீரை கடந்து வேலை செய்து மாதம் மாதம் பலர் இஎம்ஐ கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.. அவர்கள் அனைவரும் அறிய வேண்டிய முக்கியமான விஷயத்தை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
EMI கட்டுறவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் குறித்து நிதிநிலை ஆலோசகர்கள் கூறிய தகவல் ஒன்றை இப்போது பார்ப்போம். வீட்டுக்கடன்கள் பொறுத்தவரை இப்போது உங்களிடம் 10 லட்சம் பணம் கையில் இருக்கிறது.. ஆனால் நீங்கள் வாங்கும் வீட்டின் மதிப்பு 50 லட்சம் என்றால் கண்டிப்பாக மீதி 40 லட்சம் ரூபாய் லோன் தான் போடுவீர்கள். அதற்கு உங்கள் வருமானத்தை பொறுத்து மாதம் மாதம் இஎம்ஐ எவ்வளவு செலுத்தலாம் என்பதையும், எத்தனை வருடங்களில் கடனை கட்டி முடிக்கலாம் என்பதையும் நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
உதாரணத்திற்கு நீங்கள் 40 லட்சம் ரூபாய் கடனை 25 வருடம் கட்டுவதாக வீட்டுக்கடன் வாங்கி உள்ளதாக வைத்துக் கொள்வோம். அதற்கு வட்டி 8.5 சதவீதம் என்று வைத்துக் கொள்ளுங்கள். மாதம் மாதம் நீங்கள் 32209 ரூபாய் இஎம்ஐ கட்ட வேண்டியதிருக்கும். அப்படி நீங்கள் கட்டினால், கிட்டத்தட்ட 25 வருடம் முடிவில், 96,62,700 ரூபாய் நீங்கள் கட்டியிருப்பீர்கள். அதாவது அசலை விட 56,62,700 ரூபாய் கூடுதலாக கட்டித்தான் கடனை முடிக்க வேண்டியதிருக்கும்.
அதேநேரம் நீங்கள் மாதம் மாதம் கட்டும் 32209 ரூபாய் உடன் ஆண்டுக்கு ஒரு முறை வங்கியில் போய் கூடுதலாக ஒரு இஎம்ஐ அதாவது 32209 ரூபாயை கடன் வாங்கி ஆண்டில் இருந்த செலுத்த தொடங்கினால், நீங்கள் கட்டும் வட்டியான 56 லட்சம் ரூபாயில் இருந்து 42லட்சம் ரூபாய் ஆக குறைந்துவிடும். இதன்மூலம் கடனை கட்ட வேண்டிய காலமும் 25 வருடத்தில் இருந்து 20 வருடமாக குறைந்துவிடும். நீங்கள் ஆண்டுக்கு ஒரு இஎம்ஐ சேர்த்துக்கட்டினாலே நீங்கள் 14 லட்சம் ரூபாய் சேமிக்க முடியும்.
அதேபோல் கடன் வாங்கி உடன் நீங்கள் கட்டும் இஎம்ஐ ஆன 32209 ரூபாயில், 28 ஆயிரம் ரூபாய் வட்டிக்கே போய்விடும். வெறும் 3 ஆயிரத்திற்கும் சற்று அதிகமான பணம் தான் கடனை கழிக்க போகும். நீங்கள் 12 வருடம் கடன் கட்டிய பிறகு பாதி கடன் கட்டியிருப்போம் என நினைத்து கடனை மொத்தமாக அடைக்கலாம் என்று போனால், அங்கு வெறும் வட்டி தான் எடுத்திருப்பார்கள். உங்கள் அசலில் 10 லட்சம் என்கிற அளவில் தான் குறைந்திருக்கும். எனவே 3 வருடம், 4 வருடம் சேர்த்து மொத்தமாக அடைக்கலாம் என நினைத்திருந்தால் அந்த எண்ணத்தை மறந்துவிடுங்கள். கடன் வாங்கிய ஆண்டில் இருந்தே, ஒரு இஎம்ஐ தொகையை எப்படியாவது சேமித்து கட்டினாலே, நீங்கள் 14 லட்சம் சேமிக்க முடியும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications