தமிழக வெற்றி கழகத்தில் பழ.கருப்பையா! விஜயின் அரசியல் ஆலோசகர்?
சென்னை: தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற பெயரில் கட்சி நடத்தி வரும் பழ.கருப்பையா, அதை கலைத்துவிட்டு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் ஐக்கியமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விஜயின் அரசியல் ஆலோசகராகவும் பழ.கருப்பையா இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு கூடும் கூட்டம் பணம் கொடுத்து அழைத்து வரப்படும் கூட்டம் என விமர்சித்துள்ள பழ.கருப்பையா, நடிகர் விஜய்க்கு அப்படியில்லை என்றும் அவருக்காக தானாக கூட்டம் சேர்கிறது எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

அதுமட்டுமல்ல திமுகவை ஒழிக்க விஜய் பயன்படுவார் என்றால் அது தான் தன்னை பொறுத்தவரை மிகப் பெரிய தொண்டு எனக் கூறியுள்ளார். இதன் மூலம் தாம் நடத்திவரும் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தை நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தோடு இணைத்துவிடுவார் எனத் தெரிகிறது.
காங்கிரஸ், ஜனதா தளம், அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் என தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கெல்லாம் சென்று வந்தவர் பழ.கருப்பையா என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு இதே நாளில், அதாவது பிப்ரவரி 4ஆம் தேதி அன்று அவர் கட்சி ஆரம்பித்த போது, தனது தலைமையை ஏற்று 10,000 பேர் கட்சியில் இணைய காத்திருப்பதாக கூறினார். ஆனால் அவர் கூறியபடி 10,000 பேர் பழ.கருப்பையா ஆரம்பித்த கட்சியில் இணைந்தார்களா என்பது கேள்விக்குறியே. இதனிடையே நடிகர் விஜயுடன் சர்க்கார் திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தவர் பழ.கருப்பையா.
உச்ச நட்சத்திரமாக இருக்கும் போதே விஜய் அரசியலுக்கு வருவார் என கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே மிகவும் திட்டவட்டமாக கூறியவர் பழ.கருப்பையா. அவர் சொன்னது தான் இப்போது நடந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தவிப்பு விஜயிடம் இருப்பதாகவும் இதனை அவரிடம் நேரில் பேசிய போது அறிந்துகொண்டேன் எனவும் பழ.கருப்பையா 5 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications