ராமதாஸ் - அன்புமணி இடையேயான சலசலப்பு சரியாகிவிட்டது.. பாமக தொண்டர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஜிகே மணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவில் ஏற்பட்ட சலசலப்பு சரியாகிவிட்டது என்று பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ராமதாஸ் - அன்புமணி இடையே சிறு சலசலப்பு இருந்தது, அது சரியாகிவிட்டது. மே 11 ஆம் தேதி நடைபெறும் சித்திரை முழு நிலவு மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி கலந்து கொள்வார்கள் என ஜிகே மணி தெரிவித்துள்ளார்.

பாமகவில் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வியாழக்கிழமை அன்று கட்சியின் தலைவராகவும், நிறுவனராகவும் தானே பொறுப்பு வகிக்க உள்ளதாக அதிரடியாக அறிவித்தார். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக மட்டும் இருப்பார் என்றும் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த அன்புமணி, தானே தலைவராக செயல்படுவேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Peace in PMK GK Mani Confirms Truce Between Ramadoss and Anbumani

தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பாமகவில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை கட்சியின் முக்கிய நிர்வாகிகள், குடும்பத்தினர் சந்தித்துப் பேசினர். பாமக இளைஞரணி தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட முகுந்தன், அன்புமணியை நேரில் சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், பாமகவில் நடப்பது எங்களுடைய உட்கட்சி விவகாரம், எங்களுக்குள் நாங்கள் பேசிக்கொள்வோம். ஐயா ராமதாஸ் வழிகாட்டுதலுடன், அவருடைய கொள்கையை நிலைநாட்ட, பாமகவை ஒருக்கட்டத்தில் ஆளும்கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் கடுமையாக அனைவரும் உழைப்போம் என்றார்.

இதற்கிடையே, மே 11-ஆம் தேதி மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் பாமக, 'சித்திரை முழுநிலவு மாநாடு' நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அன்புமணி ராமதாஸ் முன்னின்று மேற்கொண்டு வருகிறார். இந்த மாநாட்டில் ராமதாஸும் பங்கேற்க இருக்கிறார்.

இந்நிலையில் பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசி உள்ளார். அப்போது பேசிய அவர், "மாமல்லபுரத்தில் மே 11ஆம் தேதி நடக்க உள்ள பாமக மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி இருவருமே கலந்துகொள்வார்கள். இரண்டு தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். விரைவில் சுமூகமான நிலை ஏற்படும். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது. அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+