பெண் மயிலைக் கவர.. தோகை விரித்தாடிய ஆண் மயில்... கண் கொள்ளா காட்சிதான் போங்க!
தோகை விரித்தாடும் மயிலின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சென்னை: பெண் மயிலை கவர்வதற்காக ஆண் மயில் ஒன்று தோகை விரித்தாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மயில் தோகை விரித்தாடும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம். மேகங்கள் திரண்டு, மழை வரும் போது மட்டுமே, மயில்கள் தோகையை விரித்து ஆடுவது வழக்கம். பறந்து விரிந்த அதன் அழகிய தோகைகளை பார்க்கும் போது, மனதில் கவிதை ஊற்றாக சுரக்கும்.
தேசியப் பறவையான மயில்களை பார்ப்பது இப்போதெல்லாம் அரிதாகிவிட்ட சூழலில், அவை தோகை விரித்தாடும் காட்சியை வீடியோக்களில் தான் பார்க்க முடிகிறது. அதுவும் நகர் புறத்தில் இருக்கும் மக்கள் மயில்களை குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் என்றால் உயிரியல் பூங்காவுக்கு தான் செல்ல வேண்டும்.

அதிர்ஷ்டம் இருந்தால்
அங்கேயும் அவற்றை ரசித்து பார்ப்பது கொஞ்சம் கடினமான காரியம். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவை தோகைவிரித்தாடுவதை எப்போதாவது பார்க்கலாம். அதுவும் கூண்டுக்கு வெளியே இருந்து தான் பார்க்க முடியும்.

தோகைவிரித்தாடும் ஆண் மயில்
நிலைமை இப்படி இருக்க ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடும் வீடியோ இணைத்தில் வைரவாகி வருகிறது. வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். கூடவே, "தோகை விரித்தாடும் இந்த ஆண் மயிலால் அருகில் இருக்கும் பெண் மயிலை கவர முடியுமா" என கேப்ஷன் ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார்.

வைரலாகும் வீடியோ
இந்த வீடியோ சுமார் 40 ஆயிரம் பார்வைகளை கடந்து, அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் இந்த ஆணழகை பார்த்து எந்த பெண் மயில் தான் மயங்காது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
|
மனதை கவர்ந்துவிட்டது
தோகை விரித்தாடும் அந்த ஆண் மயில், தனது பெண் மயிலை கவர்ந்ததோ இல்லையோ, நிச்சயம் நம் மனதை கவர்ந்தேவிட்டது. கொரோனாவால் திக்குமுக்காடிக்கிடக்கும் மக்களுக்கு, இதுபோன்ற வீடியோக்கள் தான் இளைப்பாறுதல்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications