தண்டத்தொகை ரத்து பண்ணுங்க.. வீட்டுமனைப்பிரிவு டூ வழிகாட்டி மதிப்பு! தமிழக அரசுக்கு பெயிரா கோரிக்கை
சென்னை: புதிய வீட்டுமனைபிரிவின் வழியே செல்லும் மின்கம்பிகளையும், தளவாடங்களையும் மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு, விண்ணப்பதாரர்கள் செலுத்தி அதற்கான ஒப்புகை சீட்டை சமர்ப்பிக்கும் பட்சத்தில், மனைபிரிவு மற்றும் குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்து உடனடியாக அதற்குரிய உத்தரவை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்துக்கு, பெயிரா வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் நிலவி வந்த பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக TNRERA-வின் தலைவர் சிவ்தாஸ் மீனாவை, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று சந்தித்தனர்.

வணிக வளாகங்கள்: இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள், சட்டசிக்கல்கள், வீட்டுமனை பிரிவு, அடுக்குமாடி குடியிருப்பு. வணிகவளாகங்கள் மற்றும் மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி பெற்ற வீட்டுமனை பிரிவு திட்டங்களை பதிவு செய்வதில் ஏற்பட்ட கால தாமதங்கள் உள்ளிட்டவை குறித்தெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டன.
மேலும், உச்சபட்சமாக தண்ட தொகையினை விதிப்பது அதாவது நகர் மற்றும் கிராமப்புறங்களில் முறையே மனை ஒன்றிற்கு ரூபாய்3000/- முதல் ரூபாய்15,000/- வரை என்கிற வகையிலும், அதுமட்டுமல்லாது திட்டத்தின் மொத்த மதிப்பில் 1% சதவீதம் என்கிற அடிப்படையிலும் உச்சபட்சமாக விதிக்கப்படும் தண்டத்தொகை சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டன.
தீர்மானங்கள்: TNRERA-வின் தலைவர் சிவ்தாஸ் மீனாவுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்தும், இச்சந்திப்பின்போது, ஃபெயிரா கூட்டமைப்பின் சார்பாக முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள் குறித்தும், பெயிரா அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின் சுருக்கமும், கோரிக்கைகளும் இதுதான்:
- தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பொதுமக்களின் 2680 திட்டங்களுக்கு தீர்வு ஏற்படாமல் நிலுவையில் உள்ளவைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் வழிவகை செய்திட வேண்டும்,
- அபிவிருத்தியாளர்கள் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் தங்களின் புதிய திட்டங்களை பதிவு செய்ய விண்ணப்பித்தால், புதிய வீட்டுமனை பிரிவிற்கு ஒரு வாரத்திற்கு உள்ளாகவும், குடியிருப்பு மற்றும் வணிக திட்டங்களுக்கு இரண்டு வாரத்திற்கு உள்ளாகவும் பதிவு செய்து உத்தரவு பிறப்பிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
- TNRERA சட்டம் பிரிவு 5(2)ன் கீழ் ஆணையமானது 30 நாட்களுக்குள் பதிவு செய்து உத்திரவிட வேண்டும் என்பதனை 15 நாட்களாக குறைத்து பதிவு செய்திடும் வகையில் வழிவகை செய்திட வேண்டும். TNRERA-வில் பதிவு செய்து 15 நாட்களுக்கு மேலாக உத்தரவு வழங்கிட காலதாமதம் ஆகும் இனங்களில் Automatic and Deemed approvalன் படி அந்த குறிப்பிட்ட விண்ணப்பமானது அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும்
- புதிய வீட்டுமனைபிரிவின் வழியே செல்லும் மின்கம்பிகளையும் தளவாடங்களையும் மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு, விண்ணப்பதாரர்கள் செலுத்தி அதற்கான ஒப்புகை சீட்டை சமர்ப்பிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் காலம் தாழ்த்தாமல், பொதுமக்களின் மனைபிரிவு மற்றும் குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்து உத்தரவு வழங்கிட வேண்டும்
- TNRERA-வின் ஒப்புகை சீட்டின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்யும் காரணங்களுக்காக பதிவு செய்யும் இனங்கள் மற்றும் எதிர்பாராத அவசர தேவைக்காக பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் அபிவிருத்தியாளர்களுக்கு அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
- சமீபத்தில் TNRERA-வின் சட்டதிட்டங்களை பின்பற்றி முறையாக பதிவு செய்து ஒப்புகை சீட்டினை பெற்ற பின்பும் மேற்கூறிப்பிட்ட காரணங்களால் சிலருக்கு விதிக்கப்பட்ட தண்டதொகையினையும் ரத்து செய்திட வேண்டும்
- அபிவிருத்தியாளர்கள் தங்களின் மனை பிரிவுகளில் அடிப்படை கட்டமைப்பினை ஏற்படுத்தி கொடுப்பதற்கான உரிய கட்டணத்தை நகர்ப்புற உள்ளாட்சிக்கு செலுத்திய ஒப்புகை சீட்டின்அடிப்படையில் TNRERA-வில் பதிவு செய்து உத்தரவு வழங்கிட வேண்டும்
- வீடு, வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு TNRERA-வின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே மேற்கூறியவைகளை குறித்து TNRERA-வின் இணையதளத்தின் வாயிலாக மாநில மொழியான தமிழ் மொழியில் காணொளிகளை பதிவு செய்து விழிப்புணர்வினை ஏற்படுத்திட வேண்டும்
- TNRERA-வின் சட்டதிட்டங்கள், நடைமுறைகள், புதிய கொள்கைகள், அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்கள் ஆகியவைகளை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மாநில மொழியான தமிழ் மொழியில் வெளியிட வேண்டும்
TNRERA-வின் செயல்பாடுகள், தகவல்கள், சேவைகள் மற்றும் உதவிகள் என ஒருங்கிணைந்த சேவை மையங்களை (Help Line) தொடங்கி அதன் வாயிலாக TNRERA குறித்த அனைத்து தகவல்களும் மாநில மொழியான தமிழ் மொழியில் பொது மக்களுக்கு எளிதில் தெரிவிக்கும் வகையில் வழிவகை செய்திட வேண்டும்
நம்பிக்கை: மேற்கண்ட கோரிக்கைகள் மற்றும் பல்வேறு கருத்துக்களையும் மற்றும் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்ட TNRERA-வின் தலைவர் சிவ்தாஸ் மீனா, ஃபெயிரா கூட்டமைப்பின் மேற்கூறிய கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாகவும் மற்றும் TNRERA Act 32ன் கீழ் சிலவற்றிற்கு அரசுக்கு பரிந்துரை செய்து தீர்வு காண வழிவகை செய்வதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து விரிவாக TNRERA உறுப்பினர்களுடனும் மற்றும் தமிழக அரசுடனும் கலந்து பேசி மேற்கூறிய FAIRA கூட்டமைப்பின் கோரிக்கைகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்" என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications