தயாநிதி மாறனை துரத்தும் மக்கள்! நாம் தமிழருக்கு மத்திய சென்னையில் நல்ல வரவேற்பு - கார்த்திகேயன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மத்திய தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் வாக்கு கேட்டு செல்லும் தயாநிதி மாறனை மக்கள் அடித்து துரத்துகிறார்கள். இந்த தேர்தலில் எங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்று மத்திய சென்னை தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

வரும் லோக்சபா தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் சிட்டிங் எம்பி தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் டாக்டர் கார்த்திகேயன் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தார்.

People are hating on DMK MP Dayanidhi Maran and they well received us says Naam Tamilar Candidate Karthikeyan

அப்போது ‛‛மத்திய சென்னை தொகுதியில் மீண்டும் மீண்டும் தயாநிதி மாறன் வென்று வருகிறார். ஆனாலும் மக்களுக்கு என்ன சென்று சேர்ந்துள்ளது என்ற கேள்வி உள்ளது. இதனால் மக்கள் வெறுப்பில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் வாக்கு கேட்டு செல்லும் தயாநிதி மாறனை மக்கள் அடித்து தூரத்துகிறார்கள். கேள்விகள் கேட்டு துளைக்கிறார்கள். அவரால் பதில் சொல்லவில்லை. மக்கள் மாற்றத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.

கடந்த முறை மாற்றம் என்று சொல்லி கொண்டு மத்திய சென்னையில் 90 ஆயிரம் ஓட்டுகள் வாங்கிய கமல்ஹாசன் இப்போது நேராக திமுகவில் சரணடைந்துள்ளார். மக்கள் உண்மையான மாற்று யார்? என்று தேடுகின்றனர். இந்த இடத்தில் நாம் தமிழர் கட்சி வலுவாக நிற்கிறது. எங்களுக்கு வரவேற்பு நன்றாக உள்ளது. நாங்கள் மக்களை சந்திக்கும்போது இந்த முறை உங்களுக்கு தான் வாக்கு. நீங்கள் தான் வர வேண்டும் என சொல்லும் வார்த்தைகள் எங்களுக்கு உத்வேகம் கொடுக்கிறது'' என்றார். மேலும் திமுக, பாஜக செயல்பாடு பற்றிய கேள்விகளுக்கு அவர் விரிவாக அளித்த பதில்களை விரிவாக செய்திக்குள் உள்ள வீடியோவில் பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+