Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் போட்டோவை தூக்கி காட்டியபடியே.. தவித்த மக்களுக்கு சாப்பாடு வழங்கிய நிர்வாகி.. வலுக்கும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தினர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்து வரும் நிலையில் விஜய் போட்டோவை தூக்கியபடியே உணவு வழங்குவதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னையில் மிக்ஜாம் புயலால் செம்பரம்பாக்கம், அடையாறு, கூவம், புழல் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் வந்துவிட்டன. அது போல் நாராயணபுரம் ஏரி உடைந்தும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் வந்துவிட்டது.

People condemns Vijay Makkal Iyakkam activist for having Vijay photo

இதனால் வீடுகளை சுற்றி 15 அடிக்கு தண்ணீர் சூழ்ந்துவிட்டது. வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் உணவு கூட இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் பல தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்கிறார்கள்.

அது போல் தமிழக அரசுடன் இணைந்து அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சியினரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். தண்ணீர், பிரட், பால், பிஸ்கட், போர்வை, அரிசி, உணவு போன்றவற்றை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் களத்தில் இருக்கிறார்கள்.

நடிகர் விஜய்யின் உத்தரவின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். இதுகுறித்து நடிகர் விஜய் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#கைகோர்ப்போம் துயர்துடைப்போம்
இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இன்று காலை வடசென்னையில் ஒரு மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள மழை நீரில் எண்ணெய் கலந்திருப்பதை வெளிச்சம் போட்டு காட்டினர். இதனால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வந்தது. இந்த நிலையில் ஒரு சிறிய செயலால் பலர் கண்டனங்கள் குவித்து வருகிறார்கள்.

அதாவது ஒரு இடத்தில் வயதானவர்களுக்கு உணவு பரிமாறுகிறார்கள். அனேகமாக அது முதியோர் விடுதியாகவோ வெள்ள நிவாரண முகாமாகவோ இருக்கலாம். உணவு பரிமாறும் அனைவருமே விஜய் புகைப்படத்துடன் கூடிய விஜய் மக்கள் இயக்கத்தின் பேட்ஜ் அணிந்துள்ளார்கள். இருந்தாலும் கட்டம் போட்ட சர்ட் போட்ட ஒருவர் விஜய்யின் புகைப்படத்தையும் வைத்துக் கொண்டு பரிமாறுவோருடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு அந்த கட்டம் போட்ட சட்டைக்காரர் உணவு பரிமாறச் சென்ற போது விஜய்யின் போட்டோவை வேறு ஒரு நிர்வாகியிடம் கொடுத்துவிட்டார். அவரும் உணவு பரிமாறும் இடங்களுக்கு விஜய்யின் போட்டோவை தூக்கிக் கொண்டு அலைகிறார். எதற்காக இந்த விளம்பரம் என பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் மக்கள் இயக்கம் பேட்ஜ் இருக்கிறது, அது போல் ஒரு ஜன்னலில் விஜய் மக்கள் இயக்க பேனரும் இருக்கிறது. அப்படியிருக்கும் போது இப்படி சாப்பாடு போடும் இடத்துக்கெல்லாம் போட்டோவை தூக்கிச் செல்வதா? அந்த வயதானவர்கள் கண்களில் படும்படி போட்டோவை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள். இதை விஜய்யே விரும்ப மாட்டார்.

ஒரு உணவு வழங்குவதிலுமா விஜய் பெயர் இருக்க வேண்டும்? தானத்தில் சிறந்தது அன்னதானமல்லவா? கர்ணன் இறந்ததும் சொர்க்கத்துக்கு அனுப்பப்பட்டார், அப்போது அங்கு சகல வசதிகள் இருந்தும் அவருக்கு பசி மட்டும் அடங்கவே இல்லை. இதை சொர்க்கத்தில் உள்ள தலைவரிடம் போய் கர்ணன் கேட்டார். நான் எவ்வளவோ தர்மங்கள் செய்திருக்கிறேன், எனக்கு ஏன் இந்த பசி எனும் கொடிய வியாதி என கேட்டார்.

அதர்கு அந்த தலைவரோ நீ பூவுலகத்தில் எத்தனையோ தர்மங்களை செய்திருந்தாலும் அன்னதானம் செய்ததில்லை. அதனால்தான் இப்படி என கூறிய தலைவன் உடனே உன் ஆள் காட்டி விலை எடுத்து வாயில் வைத்துக் கொள் என்றார். அப்படியே செய்த கர்ணனின் பசி அடங்கிவிட்டது. இதென்ன மாயம் என கர்ணன் கேட்ட போது சொர்க்கத்தின் தலைவர் கூறியது, அன்பான கர்ணா! நீ பூவுலகில் வாழும் போது பசியுடன் வந்த ஒருவன் அன்னதானச் சத்திரம் எங்கு இருக்கிறதென்று வழி கேட்டான். நீயும் உனது வலதுகை ஆள்காட்டி விரலால் சத்திரத்தின் திசையைக் காட்டினாய். அந்த புண்ணியச் செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூறினார். இப்படிப்பட்ட புண்ணிய காரியத்திற்கு விளம்பரம் தேடலாமா என விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு கண்டனங்கள் குவிகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+