பல முனைகளில் இருந்தும் படையெடுத்து வரும் விஜயகாந்த் ரசிகர்கள்.. ரமணா இறுதிக்காட்சி போல ஆகும் சென்னை!
சென்னை: விஜயகாந்த்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னையே, ரமணா படத்தின் இறுதிக்காட்சி போல ஆகியுள்ளது.
விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த மாதம் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 20 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இதனை தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து நேற்று இரவு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை காலமானார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தின் மறைவுச் செய்தி தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விஜயகாந்த்தின் ரசிகர்கள். தொண்டர்கள் அவரது வீடு முன் திரண்டனர். விஜயகாந்தின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறினர். சாலிகிராமம் வீட்டில் இருந்து விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, விஜயகாந்த் உடலுக்குப் பின்னால் ஊர்வலமாக ஏராளமானோர் நடந்து வந்தனர். கோயம்பேடு
அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. அப்பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. தொடர்ந்து கூட்டம் அதிகரித்த வண்ணம் இருப்பதால், விஜயகாந்த்தின் உடல் சென்னை தீவுத் திடலுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலையில் விஜயகாந்த்தின் உடல் தீவுத் திடலுக்கு, பொதுமக்களின் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட உள்ளது.
விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணா சாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.
விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து மதியம் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தேமுதிக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை அதிகாலையில் விஜயகாந்த் உடல் தீவுத் திடலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

விஜயகாந்த்தின் முகத்தை கடைசியாக ஒருமுறை நேரில் பார்த்து விடுவதற்காக தென் மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் சென்னை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், சென்னையில் இப்போதே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நாளை அதிகாலையில், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.
விஜயகாந்த் நடித்த 'ரமணா' திரைப்படத்தில் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் விஜயகாந்த்தை பார்த்து பேசும் வசனமான "ஒரு மனுஷன் பிரிவுக்காக நாடே அழுதா அவர் ஒரு நல்ல தலைவன்.. உனக்காக இந்த நாடே அழுவுதப்பா" என்பதைக் குறிப்பிட்டு விஜயகாந்த்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கண்ணீருடன் காத்திருக்கும் தொண்டர்களின் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், ரமணா படத்தின் இறுதிக்காட்சியில் விஜயகாந்த்தின் இறந்த உடலை காண சிறைக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நிற்பதைப் போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். அதோடு, இன்று, விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் திரண்டுள்ள ரசிகர்கள், தொண்டர்களின் படத்தை ஒப்பிட்டும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். நாளை தீவுத் திடலிலும் அதிகமானோர் திரள உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications