சளி இருந்தாலே கொரோனா வந்ததாக பயப்படாதீங்க.. சென்னையில் 26,000 மாஸ்க் ரெடி.. 'டீன்' ஜெயந்தி பேட்டி
Recommended Video
சென்னை: ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 6 வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னையில் இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பற்றி, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். தமிழகத்தை பொறுத்த அளவில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் கிடையாது. இப்போதுவரை சந்தேகத்தின்பேரில் தான் பலரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
சளி மாதிரிகள் புனே நகரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிதான் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சென்னையிலோ, தமிழகத்தின் பிற பகுதிகளிலோ, கொரோனா வைரஸ் அறிகுறி எதுவும் இல்லை.
சளி மற்றும் காய்ச்சல் இருந்தாலே, கொரோனா வைரஸ் பாதிப்பு என்று யாரும் பயப்பட வேண்டாம். இது குளிர்காலம் என்பதால் சளி மற்றும் காய்ச்சல் என்பது பரவலாக இருக்கக்கூடிய ஒன்றுதான்.
சீனாவில் இருந்து வருவோரிடம் இருந்துதான் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. விமான நிலையங்களில் தெர்மல் பரிசோதனை மூலமாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. சீனாவில் இருந்து வந்த ஒரு பெண்மணிக்கு வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்ததால் சோதனைகள் நடத்தினோம். ஆனால் அவருக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை தர ஆறு தனிமை வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. 26,000 என்ற எண்ணிக்கையில் 3 அடுக்கு முகக் கவசங்கள் தயாராக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications