சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹை! ரோபோ சின்னம்.. ஒரே குத்து குத்திட வேண்டியதுதான்!.. "அறிவுசார்" அர்ஜுனமூர்த்தியின் உள்குத்து செம!

Google Oneindia Tamil News

சென்னை: ரோபோ சின்னத்தை பார்த்தவுடன் கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கும் ரஜினி வெறியர்களுக்கும் அது ரஜினியின் கட்சியாகவே பாவித்து கொண்டு மக்கள் கணிசமான வாக்குகளை பெறமுடியும் என்ற எண்ணத்தில் அர்ஜுனமூர்த்தி அந்த சின்னத்தை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்ட நிலையில் அவரால் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனமூர்த்தி தற்போது இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற ஒன்றை தொடங்கியுள்ளார்.

அவர் வரும் சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிடுகிறார். அவருக்கு ரோபோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த சின்னத்தை மிக பிரம்மாண்டமான வகையில் வெளியிட்டார் அர்ஜுனமூர்த்தி.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இந்த சின்னம் எதேச்சையாக கிடைத்ததாக அர்ஜுனமூர்த்தி சொல்கிறார். ஆனால் ரஜினி ரசிகர்களையும் சாமானிய மக்களையும் கவர்வதற்காகவே அவர் இந்த சின்னத்தை தேர்வு செய்திருக்கலாம் என தெரிகிறது. ரஜினிகாந்த் நடித்த எந்திரன், ரோபோ 2.ஓ ஆகிய படங்களை ரசிகர்கள் இல்லாவிட்டாலும் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது.

கணிசமான வாக்குகள்

கணிசமான வாக்குகள்

இந்த நிலையில ரோபோ சின்னத்தை தேர்வு செய்தால் ரஜினி ரசிகர்களையும் கிராமத்து மக்களையும் எளிதாக கவர முடியும் என்பது அர்ஜுனமூர்த்தியின் கணக்காகும். ரோபோவை பார்த்தவுடன் ரஜினிதான் கட்சியை தொடங்கிவிட்டாரோ என்ற எண்ணம் பலருக்கு வரும். இதனால் கணிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அர்ஜுனமூர்த்தி

அர்ஜுனமூர்த்தி

ரஜினி கட்சியை தொடங்கவில்லை என்பது ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும் போதிலும் தலைவர் நடித்த படத்தின் சின்னம் என்றால் அதன் மேல் தனி பாசம்தான். அதிலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு ரோபோ சின்னம் ஈடுபடும் என அர்ஜுனமூர்த்தி அறிவித்துள்ளார்.

இமமுகவுக்கு வாக்குகள்

இமமுகவுக்கு வாக்குகள்

எனவே இந்த தேர்தலில் அர்ஜுனமூர்த்திக்கு ரஜினி கைக் கொடுக்கிறாரோ இல்லையோ அவரது ரோபோ சின்னம் நிச்சயம் கை கொடுக்கும் என்றும் கணிசமான வாக்குகளை பெற மிகவும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்றால் ஒரு சுயேச்சைக்கும் நோட்டாவுக்கும் கிடைக்கும் வாக்குகளை காட்டிலும் அதிக வாக்குகள் இமமுகவுக்கு கிடைக்கும்.

மே 2 வாக்கு எண்ணிக்கை

மே 2 வாக்கு எண்ணிக்கை

இதன் மூலம் வாக்கு வங்கியையும் அக்கட்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. இனி வரும் தேர்தல்களில் வாக்கு வங்கியுள்ள சிறிய கட்சியாக இக்கட்சி மாறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. "அறிவுசார்" அர்ஜுனமூர்த்தியின் முயற்சி எடுபடுமா இல்லையா என்பது மே 2 ஆம் தேதி தெரிந்துவிடும்.

English summary
People may get confused on seeing Robot symbol and may cast their vote on that symbol too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X