சென்னையில் தனியார் பேருந்துகளா? அது தவறான புரிதல்.. அமைச்சர் சிவசங்கர் புதிய விளக்கம்!
சென்னையில் தனியார் பேருந்து இயக்கப்படும் என்பது தவறான புரிதல் என்று சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்..
சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி கொடுக்க உள்ளதாக வெளியான செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தனியாரிடம் பேருந்துகளை வாங்கி அரசு வழித்தடத்தில் இயக்குவதே திட்டம் என்றும், தனியார் பேருந்துகளை இயக்கலாமா என்று ஆய்வு மேற்கொள்ள ஆலோசகரை தேர்வு செய்வதற்கான டெண்டர் மட்டுமே கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 625 வழித்தடங்களில் சுமார் 3,000 க்கும் அதிகமான மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் சுமார் 30 லட்சம் பேர் வரை இந்த பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
பேருந்துகளை இயக்கும் தனியார் நிறுவனங்கள் நஷ்டமடைந்தால் அவற்றிற்கு உரிய இழப்பீடு அரசு தரப்பில் வழங்கும் வகையில் கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை கண்டித்து தொமுச போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும் அனைத்து சங்கங்களையும் திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொமுச அறிவித்துள்ளது.

அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
இந்த நிலையில் சென்னையில் தனியார் பேருந்து இயக்கப்பட உள்ள விவகாரம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், சென்னையில் தனியார் பேருந்து இயக்கப்பட உள்ளதாக வெளியான செய்தி தவறான புரிதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் உலக வங்கியே பரிந்துரைத்திருக்கிறது. தேவையான பேருந்துகள் வாங்குவதற்கு, ஆயிரம் தனியார் பேருந்துகளை அரசு வழித்தடத்தில் இயங்குவதற்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

உலக வங்கியின் பரிந்துரை
உலக வங்கியின் பரிந்துரையை ஆய்வு செய்வதற்கு இப்போது தகுந்த ஆலோசகர்களையும் எடுப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் மூலமாக ஆலோசகர்கள் நியமிக்கப்பட்ட பின், அந்த ஆலோசகர்கள் சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிப்பார்கள். அதன் பின்னரே இந்த விவகாரத்தில் மேல் முடிவு எடுக்கப்படும். இப்போதைக்கு அதுபோன்ற பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார்.

பேருந்துகளை அரசே இயக்கும்
தொடர்ந்து திருச்சி, மதுரையில் தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது. இதனால் சென்னையில் எதிர்காலத்தில் வருவதற்கான சூழல் இருக்கிறதா என்ற கேள்விக்கு, தனியார் வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை இயக்கி கொண்டிருக்கிறார்கள். பேருந்தின் வழித்தடம் என்பது அரசின் வசமே இருக்கும். அப்படி அரசின் வசம் இருக்கும் வழித்தடத்தில், தனியார் பேருந்துகளை அரசு இயக்க ஒப்பந்தத்தில் தருவார்கள். கேரளாவில் இதே ஜிசிசி முறையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதிமுக ஆட்சியில் அரசாணை
இந்த முறை தமிழ்நாட்டில் இல்லை. இதுகுறித்து ஆலோசிப்பதற்கான டெண்டர் தான் கோரப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக மாலையில் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். இந்த நடைமுறைக்கு அரசாணை வெளியிட்டது கடந்த அதிமுக அரசு தான். இதுதேவையில்லாத பதற்றம். தேவையில்லாத சந்தேகம். சென்னை மாநகர பேருந்துகளை தனியார் மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications