சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டு மக்களுக்கே முன்னுரிமை! தமிழக அரசு மிகத் திட்டவட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நிறுவப்படும் புதிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும், வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டு மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த நிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு;

காந்தாரி, புளுகுமூட்டை, பாஜகவுக்காக நாடகம்- ஆளுநர்- இபிஎஸ் சந்திப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு சாடல்காந்தாரி, புளுகுமூட்டை, பாஜகவுக்காக நாடகம்- ஆளுநர்- இபிஎஸ் சந்திப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு சாடல்

 டாடா எலெக்ட்ரானிக்ஸ்

டாடா எலெக்ட்ரானிக்ஸ்

டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள GMR தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்துவருகிறது. 4684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுவரும் இத்தொழிற்சாலையின் மூலம் ஏறத்தாழ 18000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 5500 தமிழர்களுக்கு

5500 தமிழர்களுக்கு

இத்தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுவருவதாக பத்திரிக்கை செய்திகளும் புகார்களும் அரசிற்கு வந்துகொண்டிருக்கின்றன. இந்நிறுவனம் தற்போது வரை தமிழ்நாட்டைச் சார்ந்த ஏறத்தாழ 5500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வணிக ரீதியிலான உற்பத்தியினைத் தொடங்கும் போது பணியாளர் தேவையில் ஏறத்தாழ 80 விழுக்காடு பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களை நியமிக்க திருவாளர்கள் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பொறுப்புறுதி அளித்துள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்கள்

வேலைவாய்ப்பு முகாம்கள்

பணிநியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு (மற்றும்) வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் இந்நிறுவனத்துடன் கலந்தாலோசனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

தமிழர்களுக்கே முன்னுரிமை

தமிழர்களுக்கே முன்னுரிமை

மேற்காணும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களில் 7559 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களில், 1993 நபர்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 3 நாட்கள் நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் 895 நபர்கள் கலந்துகொண்டதில், 355 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு நிறுவனத்தால் வேலைவாய்ப்பு வழங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை இந்த அரசு உறுதி செய்யும்.

English summary
The Government of Tamil Nadu has clearly stated that the people of Tamil Nadu will be given priority for employment in all the companies including the new industries to be established in Tamil Nadu. Industry Minister Thangam Tennarasu has given a new explanation in the face of complaints that migrant workers are being given a large number of jobs in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X