“விஜய் கூட்டத்தில் பங்கேற்காத திமுக.. மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்” - ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்காதது வருத்தமளிக்கிறது என்றும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்த ஒற்றுமை இப்போது சீர்குலைந்தது குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனது x பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது.

P Chidambaram

தொகுதி மறுவரை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம். 2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும். தொகுதி மறுவரை மசோதாவைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தன் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்" என தெரிவித்திருக்கிறார்.

அனைத்துக்கட்சி கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியிருக்கிறது. கடந்த முறை மத்திய அரசு கொண்டு வந்திருந்த தொகுதி மறுவரையறை மசோதாவை தற்போது மீண்டும் கொண்டுவர முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.

இந்த மசோதாவை எதிர்ப்பது குறித்து இன்று தவெக அனைத்துக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தை கூட்டியிருந்தது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.

திமுக எம்பி கனிமொழி இது குறித்து கூறுகையில், "பொதுவாக அனைத்துக்கட்சி கூட்டம் எனில், கட்சி தலைவர்களுக்குதான் கடிதம் எழுதப்படும். ஆனால், இங்கு தலைமை செயலாளர்.. ஒவ்வொரு எம்பிக்கும் தனித்தனியாக கடிதம் எழுதுகிறார். இதுவே சந்தேகத்தை கிளப்புகிறது. தலைமை செயலாளர் என்பவர் அரசுக்குதான் வேலை செய்கிறாரா.. அல்லது ஒரு தனி இயக்கத்திற்கு வேலை செய்கிறாரா?

தவெக தலைமை செயலாளர் போல அவர் செயல்படுகிறார். நாங்கள் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தியபோது, ஒவ்வொரு கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதினோம். அந்த கட்சிதான் யாரை அனுப்புவது என்பது குறித்து முடிவு செய்யும். நாங்கள் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு, நியாயமான தொகுதி மறுவரையறையைதான் கேட்கிறோம்" என்று கூறியிருந்தார்.

இப்படி இருக்கையில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஒற்றுமை குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+