ரூ. 6000 இல்லை.. மொத்தமாக ரூ. 9000.. 15 நாட்களில் மக்களுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்.. பெண்கள் குஷி
சென்னை: சென்னையில் கனமழை வெள்ளத்திற்கு இடையே நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது. நிவாரண உதவி 6000 ரூபாயோடு சேர்த்து மக்கள் மொத்தமாக அடுத்த 9 ஆயிரம் ரூபாய் வரை தொகையை அடுத்த சில நாட்களில் பெற உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-3-2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.

மகளிர் உரிமை திட்டம்: தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 24-7-2023 அன்று தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 இலட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான 15-9-2023 அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000/- பெற்று பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.
மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ். முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து. மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை கடந்த 10.11.2023 வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கூடுதல் தொகை: இந்த மாதம் 15ம் தேதி ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. அடுத்த மாதம் பொங்கல் காரணமாக 15ம் தேதிக்கு முன்பாக ஜனவரி முதல் வாரமாக அந்த மாதத்திற்கான ரூபாய் 1000 வழங்கப்பட உள்ளது. மொத்தமாக 2000 ரூபாய்.
இந்த நிலையில் எல்லா வருடமும் பொங்கலுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். கரும்பு, வெல்லத்திற்கு பதிலாக பணமாக பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த பரிசுத்தொகை இந்த வருடமும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. இதற்காக 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரூபாய் 3000 மக்களுக்கு தமிழ்நாடு முழுக்க அடுத்த 4 வாரங்களில் வழங்கப்பட உள்ளது.
இதோடு சென்னை, திருவள்ளூர் மக்களுக்கு கூடுதலாக 6000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. மொத்தமாக 9 ஆயிரம் ரூபாய் சென்னை வாசிகளுக்கு வழங்கப்பட உள்ளதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications