கொரோனா தடுப்பூசி போட்டுக்கணுமா.. க்யூவ்ல நிக்க வேணாம்.. இப்படி போய் அப்படி வந்துடலாம்!
சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்க வேண்டும் என்றால் கியூவில் நிற்க வேண்டாம். வேகமாக போட்டுகிட்டு வந்துவிடும் அளவுக்கு தற்போது வசதிகளை தமிழக அரசு செய்துள்ளது.
Recommended Video
கொரோனா பரவலை தடுக்க தற்போதைய தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக பாதிப்புகளும், உயிரிழப்பும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனிடையே, வரும் அக்டோபர் மாதம் கொரோனா 3-ம் அலையின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று முதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த்து.

டிஎம்எஸ் அலுவலகம்
அதன்படி முதலில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள டிபிஎச் அலுவலகத்தில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதுகுறித்து மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்தனர்.

24 மணி நேரம்
இதுகுறித்து தெரிவித்த பொதுமக்கள், 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படுவது வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். டோக்கன் வாங்கி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டாம். கூட்ட நெரிசலில் கொரோனா பரவும் அச்சமின்றி, எந்த நேரத்திலும் ஊசி போட்டு கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.

தமிழக அரசு
இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கும், மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்வதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சென்னையை பொறுத்தவரை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு முத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று முதல் 24 மணி நேரமும்
இதைபோல் தமிழகம் முழுவதும் இன்று முதல் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா பரவலின் 3ஆவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம். இந்த 3ஆவது அலையானது அக்டோபர் மாதம் உக்கிரமாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இத்தனை தினங்களாக தமிழகம் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசிகள் குறைந்த அளவில் காணப்பட்டன. இதனால் மக்கள் தினந்தோறும் வரிசையில் நின்று காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்றனர். இந்த நிலையில் இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழக அரசுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

தடுப்பூசி போடாதவர்கள்
மேலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்களைத்தான் இந்த கொரோனா 3-ஆவது அலை தாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 100 சதவீதம் தடுப்பூசியை போட அரசு தீவிரம் காட்டியுள்ளது. குழந்தைகளுக்கு போடக் கூடிய சைகோவ் டி தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications