Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனிநபர் வருமானம்: திமுக ஆட்சியில் இருமடங்கு வளர்ச்சி - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய தனிநபர் வருமானத்தைவிட உயர்ந்து தமிழகம் ரூ.1.96,309 பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், அடுத்து வர உள்ள திராவிட மாடல் 2.0-இல் தனி நபர் வருமானத்தில் முதல் மாநிலமாக உயருவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2014 - 2015 இல் தேசிய அளவில் தனிநபர் வருமானம் ரூ. 72 ஆயிரத்து 805 ஆக இருந்தது. தற்போது 57.5 சதவீதம் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது. அதாவது 2024 - 2025 ஆம் ஆண்டில் ரூ. 1,14,710 ஆக உயர்ந்துள்ளது.

per-capita-income-has-doubled-under-dmk-rule-chief-minister-stalin-is-proud

இதில், கர்நாடக மாநிலத்தில் தனிநபர் வருமானம் ரூ. 2 லட்சத்து 6 ஆயிரத்து 605 ஆகவும், இரண்டாம் இடமான தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ. 1 லட்சத்து 96 ஆயிரத்து 309 ஆக உள்ளது என்று மத்திய அரசு புள்ளி விவரம் அளித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்தபடி திமுக அரசு 2024-2025 ஆம் ஆண்டில் 9.69 சதவீத பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அடைந்துள்ள மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இது.

ஜூலை 21 ஆம் தேதி லோக்சபாவில் மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்துள்ள பதிலில் தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ.1.14.710 ஆக உள்ளது. தேசிய சராசரி தனிநபர் வருமானத்தைவிட உயர்ந்து தமிழகம் ரூ.1.96,309/-பெற்று இந்தியாவிலேயே இரண்டாவது இடம் என அறிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு முதல் தமிழகம் தொடர்ந்து அடைந்துவரும் வளர்ச்சிகள் சாதனைகள் ஆகியவற்றை எவராலும் மறைத்திட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்து வர உள்ள திராவிட மாடல் 2.0-இல் தனி நபர் வருமானத்தில் முதல் மாநிலமாக உயருவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனிநபர் வருமானத்தில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது எக்ஸ் தள பதிவை டேக் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் திமுக ஆட்சியில் இரு மடங்கு வளர்ச்சி என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது: தேசிய சராசரியை விஞ்சினோம்! கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்! அடுத்து வரவுள்ள திராவிட மாடல் 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+