விஜய் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. பெரம்பூரில் வரிசை எண் 16ல் புதிய ட்விஸ்ட்
சென்னை: தவெக தலைவர் ஜோசப் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் பெரம்பூரில் விஜய்க்கு வரிசை எண் 16 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் C. ஜோசப் விஜயின் வரிசை எண் 16 என்பதை "NOTA" என தவறாக கூறி, வியாசர்பாடி மார்க்கெட்டில் நோட்டீஸ் விநியோகம் மர்ம நபர்களால் செய்யப்பட்டிருப்பதாக தவெகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தவெகவினர் வெளியிட்டு வருகிறார்கள்.
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி என்பது போல் விஜய் பனையூரை விட்டு கிளம்பி வேனில் எங்கு பிரச்சாரம் சென்றாலும் அவரை குறிவைத்து தாக்கி வருகிறது திமுக அதிமுக பாஜக.. மூன்று பக்கமும் எதிர்ப்பு இருந்தாலும் விஜய் திமுகவைத்தான் பிரதானமாக எதிர்க்கிறார். அதேபோல் திமுகவை போல் அதிமுக மற்றும் பாஜக தவெகவை அந்த அளவிற்கு விமர்சிப்பது இல்லை. இன்னும் சொல்லப்போனால் கண்டு கொள்ளவில்லை என்பதே உண்மை. அதேநேரம் நாம் தமிழர் கட்சியினர் தான் விஜய் மற்றும் தவெகவினரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த சூழலில் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதிலும் சிக்கல் விஜய்க்கு இருக்கிறது. ஏனெனில் விஜய் என்ற பெயரிலேயே இரு தொகுதிகளிலும் சுயேட்சைகள் களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள். இது போதாது என்று பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு இன்னொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பெரம்பூரில் விஜய்க்கு வரிசை எண் 16 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் C. ஜோசப் விஜயின் வரிசை எண் 16 (வாக்களிக்கும் பூத்தில் வரிசை எண்) என்பதை "NOTA" என தவறாக கூறி, வியாசர்பாடி மார்க்கெட்டில் நோட்டீஸ் விநியோகம் மர்ம நபர்களால் செய்யப்பட்டிருப்பதாக தவெகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் தவெகவினர் வெளியிட்டு வருகிறார்கள்.
இப்படி பிரச்சாரம் செய்வதால் வரிசை எண் 16ஐ நோட்டோ என்று கருதி பலர் விஜய்க்கு ஓட்டுப்போடாமல் போய்விடுவார்கள் என்று தவெகவினர் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் தான் அவர்கள் பெரம்பூரில் விஜய்க்கு வரிசை எண் 16 விசில் சின்னம் என்று இப்போது தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஜோசப் விஜய் என்ற பெயரில் விஜய் பெயர் இருக்கும் என்பதையும் விளம்பரம் செய்து வருகிறார்கள்.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜய்க்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒதுக்கப்பட்ட வரிசை எண் 13 ஆகும். விஜய் இதில் இரண்டு தொகுதிகளில் வென்றாலும், ஒரு தொகுதியை பதவி ஏற்கும் முன்பே ராஜினாமா செய்தாக வேண்டும்.. அவர் எந்த தொகுதியில் ஜெயிப்பார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.















Click it and Unblock the Notifications