பெரம்பூரில் விஜயின் வெற்றிக்கு சிக்கல்.. தவெக சின்னம் விசிலா? கேமராவா? குழப்பிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கும் நிலையில் அதற்கு சிக்கலை ஏற்படுத்தும் பணியை தொடங்கி உள்ளது வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி. இதனால் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் சின்னம் விசிலா? கேமராவா? என்ற குழப்பம் வாக்காளர்களிடையே ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சியை பிடித்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் சமீபத்திய கருத்து கணிப்புகள் அவருக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளன. சில கருத்து கணிப்புகள் திமுகவுக்கும், சில கருத்து கணிப்புகள் அதிமுகவுக்கும் சாதகமாக வந்துள்ளன. இருப்பினும் விஜய் தொடர்ந்து திமுக, தவெக இடையே தான் போட்டி என்று கூறி வருகிறார்.

இந்த தேர்தலில் விஜய் 2 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஒன்று சென்னை பெரம்பூர். இன்னொன்று திருச்சி கிழக்கு. இதில் பெரம்பூர் தொகுதியில் உறுதியாக வெற்றி பெறலாம் என்று விஜய் நம்புகிறார். இப்போது அந்த நம்பிக்கைக்கு சிக்கல் உருவாகி உள்ளது. இந்த சிக்கலை உருவாக்கியது வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி.
தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர்
இந்த கட்சி கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தது. வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை கூடுதலாக ஒரு சீட் கேட்டார். திமுக வழங்க மறுத்ததால் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்.
தற்போது அவர் பிற சிறிய கட்சிகள் அமைப்புகளுடன் சேர்ந்து தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் பெரம்பூர் தொகுதியில் து வேணுகோபால் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
டிவிகே பெயரில் கேமரா சின்னம்
இந்நிலையில் தான் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தொகுதி முழுவதும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு தேர்தலில் கேமரா சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தமிழக வாழ்வுரிமை கட்சியின் பெயரை சுருக்கி TVK என்ற பெயரில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
TVK சின்னமான கேமராவில் வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர் வேணுகோபாலின் போட்டோவுடன் TVK-வின் சின்னம் கேமரா என பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கி வருகின்றனர்.
விஜய்க்கு சிக்கல்
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை தான் TVK என தொண்டர்கள் அழைத்து வருகின்றனர். தற்போது விஜய் விசில் சின்னத்தில் போட்டியிடும் சூழலில் TVK என்ற பெயரில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஓட்டு சேகரித்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தேர்தலில் விஜய்க்கு கிடைக்கும் ஓட்டுகளை குறைக்க வாய்ப்புள்ளது.
தவெகவினர் புகார்
இதனால் பெரம்பூரில் தவெக நிர்வாகிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். அதில், ''தமிழக வாழ்வுரிமை கட்சியினர் டிவிகே என்ற பெயரில் கேமரா சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றனர்.
இது தமிழக வெற்றிக் கழகத்தின் பெயராகும். இதனால் அவர்களின் செயல் தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். வாக்காளர்களை குழப்பமடைய செய்வதோடு தேர்தலின் நியாயத்தன்மையை பாதிக்கிறது. இதனால் எங்களின் கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகார் அளித்துள்ளனர்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்!












Click it and Unblock the Notifications