பெரியார் பரம்பரையில் இன்னொரு எம்எல்ஏ! அரசியலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி! அதுவும் சோனியா முன்னாடியே
சென்னை: தமிழக அரசியலில் திராவிட இயக்கத்தின் அடையாளமாக விளங்கும் தந்தை பெரியாரின் குடும்பத்திலிருந்து, ஐந்தாம் தலைமுறையாக அரசியலில் கால் பதித்துள்ளார் சமண்ணா. ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேத்தியும், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா.வின் மகளுமான சமண்ணா, தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக அரசியலில் சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம் போன்ற கருத்துகளை விதைத்தவர் தந்தை பெரியார். அவரது திராவிட கழகம் உருவாக்கிய அரசியல் சிந்தனை, பல கட்சிகளின் தோற்றத்துக்கும், தமிழக அரசியலின் போக்குக்கும் அடித்தளமாக அமைந்தது. இன்றளவும் பெரியாரின் கொள்கைகள் அரசியல் மட்டுமின்றி சமூக தளத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், அவரது கொள்கைகளின் நேரடி வாரிசாகவும் அரசியலில் செயல்பட்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். பெரியாரின் பேரன் என்ற பெருமையோடு, தமிழக காங்கிரஸ் அரசியலில் முக்கியமான முகமாக விளங்கியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

தந்தை பெரியார்
அவரது தந்தையான ஈவிகே சம்பத், தந்தை பெரியாரின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குடும்ப பின்னணி காரணமாகவே, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அரசியலில் தனித்த அடையாளம் இருந்தது. அவர் தமிழக காங்கிரஸ் தலைவராக மூன்று முறை பதவி வகித்ததுடன், மத்திய அமைச்சராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பெரியார் குடும்பம்
இளங்கோவனின் மகனான திருமகன் ஈ.வெ.ரா., 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இளம் வயதிலேயே அரசியலில் நம்பிக்கைக்குரிய தலைவராக உருவெடுத்து வந்த திருமகன், உடல்நலக் குறைவு காரணமாக திடீரென மறைந்தது தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஆனால், அவரும் பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காலியானது. இந்த நிலையில், அந்தத் தொகுதியில் நடந்த அடுத்த இடைத்தேர்தலில், இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை களமிறக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். ஆனால், அந்தத் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்காமல், திமுக சார்பில் சந்திரமோகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, அவர் வெற்றி பெற்றார்.
ஈரோடு கிழக்கு
இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக காங்கிரசிடம் இருந்து பறித்துவிட்டதாக, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி மேலிடத்தில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, வரும் சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு கேட்க வேண்டும் என்றும், இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அங்கு வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் டெல்லி மேலிடம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமண்ணா காங்கிரஸ்
இந்த அரசியல் சூழலில்தான், ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேத்தியும், திருமகன் ஈ.வெ.ரா.வின் மகளுமான சமண்ணா, டெல்லியில் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் இருந்தனர். இளங்கோவனின் பிறந்தநாளை முன்னிட்டு, சமண்ணா காங்கிரசில் இணைந்ததாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பெரியார் மரபு
தந்தை பெரியாரின் குடும்ப மரபு, ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பாரம்பரியம், திருமகன் ஈ.வெ.ரா.வின் அரசியல் அடையாளம் ஆகிய அனைத்தையும் ஒருங்கே சுமந்து, சமண்ணா அரசியலில் காலடி எடுத்திருப்பது, தமிழக காங்கிரஸ் அரசியலில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சமண்ணாவின் அரசியல் பயணம் தொடங்கியிருக்கும் நிலையில், அவரும் அரசியலில் தனது முத்திரையை அழுத்தமாக பதிப்பார் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications