சிலை சர்ச்சைக்கு மத்தியில்.. மேடையில் எழுந்த பெரியார்.. சிரித்த கனிமொழி.. உடன்பிறப்புகள் உற்சாகம்!
சென்னை : பெரியார் சிலை குறித்த சர்ச்சைகள் சமீபகாலமாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் பெரியார் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டது.
Recommended Video
சென்னையில் கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த நிறைவு விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு, சீர்திருத்தவாதிகளின் பெருமைகளை உணர்த்தும் வகையில் ஒலி - ஒளிக் காட்சி நிகழ்த்தப்பட்டது.
நடிகர் கமல்ஹாசன் இந்த ஒலி - ஒளிக் காட்சி நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்திருந்தார். 'தமிழ் மண்' என்ற தலைப்பில் நிகழ்ந்த இந்தப் பகுதி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா
சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

கண்கவர் கலை நிகழ்ச்சிகள்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, கீ போர்டு கலைஞர் ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் ஆகியோர் இணைந்து பல பாடல்களை இசைத்தனர். தொடர்ந்து டிரம்ஸ் வாசித்தபடியே மேடையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இருந்த இருக்கை அருகே சென்றார் டிரம்ஸ் சிவமணி. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார்.

தமிழ் மண்
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கமல்ஹாசன் குரலில் ஒலித்து பலரது கவனத்தை ஈர்த்த 'தமிழ் மண்' நிகழ்ச்சியின் தொடர்ச்சி இன்றைய நிறைவு விழாவில் இடம்பெற்றது. விடுதலைப் போராட்ட வரலாற்றையும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமையையும் பறைசாற்றும் இந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் முதல் பாகம் போட்டியின் துவக்க விழாவில் நிகழ்த்தி காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரம்மிப்பு
கமல்ஹாசனின் கணீர் குரலில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழக்கையும், வரலாறும், அரங்கில் கூடியிருந்த ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் சிலிர்க்கவும், பிரம்மிக்கவும் வைத்தது. விழாவில் மருதநாயகம் வீரபாண்டிய கட்டபொம்மன் , வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோரின் வரலாறு நடித்து காட்டப்பட்டது.

சீர்திருத்தவாதிகள்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் 'தமிழ் மண்' தொகுப்பில் அயோத்திதாச பண்டிதர், பாரதியார், வ.உ.சி, பெரியார் உள்ளிட்டோர் குறித்த வரலாறும் இடம் பெற்றது. கமல்ஹாசனின் குரலில் தந்தை பெரியார் பற்றிய காட்சித் துணுக்கு பெரும் வரவேற்பைப் பெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்திய சீர்திருத்தவாதி என கமல்ஹாசன் குறிப்பிட்டதும், விழா அரங்கில் பெரும் ஆரவாரம் எழுந்தது. திமுக எம்.பி கனிமொழி புன்னைகோடு கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர்கள்
மேலும், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட முதல்வர்கள் மற்றும் அவர்களின் சாதனைகளை பெருமைப்படுத்தும் விதமாகவும் டிஜிட்டல் திரையில் படங்கள் திரையிடப்பட்டதோடு, அவர்களின் பெருமைகளும் சொல்லப்பட்டன.
-
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன? -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications