கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கோவில் கட்டுவதா? இடித்து தள்ளுங்க.. கொந்தளிக்கும் 'கருஞ்சட்டைகள்'!
சென்னை: செங்கல்பட்டு அருகே கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய விவகாரத்தில் இப்போது திராவிடர் கழகத்தின் பகுத்தறிவாளர் அமைப்பும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். சென்னையில் இருந்து 40 கிமீ, 50 கிமீ தொலைவில் இந்த பேருந்து நிலையம் இருப்பதால் தென் மாவட்ட மக்கள் அவதிப்படுவதாக குமுறல்கள் வெளிப்பட்டன. தென் மாவட்டங்களுக்குள் சென்னைக்குள் நுழையாமல் 40 கிமீ, 50 கிமீ-க்கு முன்னதாகவே இறக்கிவிடப்பட்டு மாநகரப் பேருந்துகளை பிடித்து செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட காரணங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு ஏன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்கனும்? அங்கே எதற்கு உதயசூரியன் சின்னம் இருக்கனும்? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கேள்விகளை எழுப்புகின்றனர்.
'கிளாம்பாக்கம்' பேருந்து நிலையம்.. பேசாம செங்கல்பட்டுக்கு கொண்டு போங்க..குமுறும் தென் மாவட்ட மக்கள்!
இந்த வரிசையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் புதிய சர்ச்சையை எதிர்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக திராவிடர் கழகத்தின் பகுத்தறிவாளர் கழகம் அரசுக்கு முன்வைத்துள்ள வேண்டுகோள்:
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் தமிழ்நாடு அரசால் மிகச் சிறப்பாக – மக்கள் நலன்கருதி கட்டப் பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில் கோவில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது – அதிர்ச்சியை அளிக்கக் கூடியதும் – அரசு ஆணை மீறலுமாகும்.
கோயம்பேட்டில் லூலூ மால் தானே? 40 கிமீ தொலைவில் எதுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்? சீறிய சீமான்
அறிஞர் அண்ணா முதலமைச்சராக வந்த நிலையில், அரசு அலுவலகங்களிலோ, வளாகத்திலோ எந்த மத வழிபாட்டுச் சின்னங்களும் இருக்கக் கூடாது என்று சுற்றறிக்கை தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டது. நீதிமன்றங்களும், அரசு வளாகத்திற்குள் எந்த மதத் தொடர்பான கோவிலையும் கட்டக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளன. இந்த நிலையில், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் 'திராவிட மாடல்’ அரசுக்குச் சொந்தமான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இதனை உடனே அகற்றவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இன்றேல், நீதிமன்றம் வாயிலாகப் பரிகாரம் காண நேரிடும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடக் கூடாது; இவ்வாட்சியின் காவலர்கள் நாங்கள்! இவ்வாறு பகுத்தறிவாளர் கழகம் வலியுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications