திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்போருக்கு பெரியாரின் கைத்தடியே பதிலளிக்கும்! ஸ்டாலின் பேச்சு
சென்னை: இன்று எழும்பூரில் உள்ள பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்போருக்கு பெரியாரின் கைத்தடியே பதிலளிக்கும் என்று பேசினார்.
பெரியாரின் நினைவு நாளான இன்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து அங்கு பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் என்றால் என்ன எனக் கேட்போருக்குப் பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும் என்று குறிப்பிட்டார்.
மேலும், பெரியார் நினைவிடத்திற்கு வந்ததைத் தாய் வீட்டிற்கு வந்ததை போல் உணர்கிறேன் என்றும் பெரியாரின் தொண்டராக கி.வீரமணியை வாழ்த்துகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
பெரியாரின் 51 ஆவது நினைவு நாளில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்து கொண்டு இருப்போருக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும். நான் இப்போது தாய் வீட்டிற்கு வந்து இருக்கிறேன். தாய் வீட்டுக்கு வரும் போதெல்லாம் எனக்கு உணர்ச்சி எழுச்சி ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட தமிழ் இனம், ஒற்றுமை பெறவும் சுயமரியாதை உணர்வு பெற்று, மேல் எழுந்து நிற்கவும் தன் வாழ்நாள் முழுக்க பாடுபட்டு, பல தியாகங்களைச் செய்து, நமது இனத்திற்காக உழைத்தவர் ஈரோட்டுச் சிங்கம் பெரியார்.
பெரியாரின் தியாகத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்த டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆய்வு மையம் அமைகிறது. பெரியார் தனது பயணத்தை முடித்துக் கொண்டார், நாம் தொடர்வோம் என்று கருணாநிதி சொன்னார். தந்தை பெரியாரின் தொண்டர்களான நாம் அதைச் செய்துள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
-
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications