ரேஷன் கடைகளை நடத்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அனுமதி.. கூட்டுறவுத்துறை உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளை நடத்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு அனுமதி அளித்து கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள ஊராட்சி அல்லது நகர்ப்புற வார்டு பகுதியைச் சேர்ந்த, குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வரும், முறையான தர மதிப்பீடு பெற்ற, வங்கிக் கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் மற்றும் கணக்கு பதிவேடுகளை முறையாக பராமரிக்கும் சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.

ration shop Cooperative

இதுதொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி நிலவரப்படி 1,714 விற்பனையாளர் பணியிடங்களும், 176 கட்டுநர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்களால், ஏற்கனவே பணியில் உள்ள விற்பனையாளர்கள் கூடுதல் பொறுப்பில் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் பொது வினியோகத் திட்டப் பொருட்களை வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

காலிப்பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நிரப்புவதற்கான நடைமுறைக்கு காலதாமதம் ஏற்படும் என்பதால், அதுவரையிலான இடைக்காலத்தில் பொது வினியோகத் திட்டப் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்காக, ரேஷன் கடை பணிகள் தொடர்பாக பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு காலியாக உள்ள ரேஷன் கடைகளை தற்காலிகமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில், வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டப் பணிகளிலும் இவர்களை தற்காலிகமாக ஈடுபடுத்தலாம்.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள ஊராட்சி அல்லது நகர்ப்புற வார்டு பகுதியைச் சேர்ந்த, குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வரும், முறையான தர மதிப்பீடு பெற்ற, வங்கிக் கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் மற்றும் கணக்கு பதிவேடுகளை முறையாக பராமரிக்கும் சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

விற்பனையாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ரேஷன் கடை அமைந்துள்ள பகுதியில் வசிப்பவராகவும், குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு ரேஷன் கடை செயல்பாடு தொடர்பான அடிப்படை பயிற்சி வழங்கப்படும்.

பொது வினியோகத் திட்ட செயல்பாடுகள், கைரேகை அங்கீகாரம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட உரிமைகள், இருப்பு மற்றும் விற்பனைப் பதிவேடுகளை பராமரித்தல், விற்பனைத் தொகையைச் செலுத்துதல், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் நடத்தை விதிகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும், இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது.

மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். இந்தப் பணிக்கு நிரந்தர பணி உரிமை அல்லது முன்னுரிமை கோர முடியாது. மேலும், சங்கம் நிர்ணயிக்கும் ரூ.10 ஆயிரம் பிணை வைப்புத் தொகை மற்றும் ரூ.1 லட்சம் உத்தரவாதக் காப்பீடு தொடர்பான நிபந்தனைகளும் பின்பற்ற வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+