இன்றும் நாளையும் வானில் நடக்கப்போகும் அதிசயம்! வெறும் கண்ணால் பார்க்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் விண்கல் மழை பூமியின் மீது பொழிகிறது. இது அறிவியல் ஆச்சரியங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விண்கல் மழை ஆகஸ்ட் மாதம் 12-13ம் தேதி பொழிகிறது. இதனை நம்மால் வெறும் கண்களால் பார்க்க முடியும்.
இந்த பூமியே விண்கற்கள் மோதலால்தான் உருவானது. தினந்தோறும் பூமியின் மீது விண்கற்கள் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. சரி இந்த விண்கற்கள் எங்கிருந்து வருகிறது தெரியுமா? பொதுவாக இப்படியான விண்கற்கள் வால்நட்சத்திரங்களிலிருந்துதான் பூமிக்கு வருகிறது. அதாவது, வால் நட்சத்திரங்கள் சென்ற பாதையில் அது விட்டுச் சென்ற தூசி துகள்கள் இருக்கும்.

விண்வெளியில் காற்று இல்லாததால் இந்த துகள்கள் எங்கேயும் போகாது. இந்நிலையில் பூமி இந்த துகள்கள் இருக்கும் பாதை அருகே போகும்போது அந்த துகள்கள் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு விண்கல் மழையாக பூமியில் விழும். தற்போது ஸ்விஃப்ட்-டட்டில் வால் நட்சத்திரம் கடந்து சென்ற பாதையின் அருகே பூமி செல்வதால் இன்றும் நாளையும் பூமியில் விண்கல் மழை தெரியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஸ்விஃப்ட்-டட்டில் எனும் வால் நட்சத்திரம் 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும். அப்படி சமீபத்தில் வந்தபோது அதன் வாலிலிருந்து தூசிகளை, சிறு கற்களை விட்டு சென்றிருக்கிறது. இதன் அருகே பூமி இன்றும் நாளையும் செல்கிறது. இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் உங்களால் விண்கல் மழையை பார்த்து ரசிக்க முடியும்.

நீங்கள் இருக்கும் இடத்தில் ஒளி மாசு குறைவாக இருப்பின், அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்கு 50-100 விண்கற்கள்கள் பூமியை நோக்கி விழுவதை பார்க்க முடியும். இதற்கு பெர்சீட்(Perseid) விண்கல் பொழிவு என ஆய்வாளர்கள் பெயர் வைத்திருக்கின்றனர். இந்த விண்கல் மழையானது ஆகஸ்ட் 24 வரை நீடிக்கும். இருப்பினும் இன்றும் நாளையும்தான் வானில் அதிக அளவு பொழிவு இருக்கும்.
இதை வடக்கு அரைகோளத்தில் உள்ள நாடுகளில் மட்டுமே பார்க்க முடியும். இந்தியா இந்த பகுதியில் இருப்பதால் நம்மாலும் பார்க்க முடியும். இந்தியா தவிர சீனா, ஜப்பான், கொரியா, தென்கிழக்கு ஆசியா (இந்தோனேசியா மற்றும் மலேசியா தவிர), சைப்ரஸ், கிரீஸ் மற்றும் துருக்கி தவிர அனைத்து ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, வட ஆப்பிரிக்கா, எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ, ஓசியானியா, வடக்கு மரியானா தீவுகள் ஆகிய பகுதிகளும் இதை பார்க்க முடியும்.
விண்கல் என்றாலே நமக்கு ஒருவித அச்சம் இருக்கும். ஏனெனில் விண்கல் மோதிதானே ஒரு காலத்தில் டைனோசர்கள் அழிந்து போனது. எனவே தற்போது பெய்யும் விண்கல் மழை பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா? என்று பலர் கேள்வியெழுப்புகின்றனர். இதற்கும் விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர்.
அதாவது, "விண்கற்கள் அளவில் சிறியவை. அவை விட்டுச் செல்லும் துகள்கள் அதிலும் மிகச் சிறியவை. தற்போது இந்த துகள்கள்தான் பூமியில் விழுகிறது. விண்கல் அல்ல. மற்றொரு விஷயம் என்னவெனில், பூமியின் மீது விழும் இந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் உரசி தீப்பிடித்து எரிந்துவிடும். எனவே இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது இவ்வாறு தீப்பிடித்து எரிவதன் காரணமாகதான் நமக்கு விண்கல் மழை தெரிகிறது. ஆகவே இதனை வெறும் கண்களால் தாராளமாக பார்க்கலாம்.
இதனை தமிழ்நாட்டில் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் ஒளி மாசு குறைவாக உள்ள இடத்தில் இருந்து பார்த்தால் இதன் அழகை முழுமையாக ரசிக்கலாம். சென்னைக்கு அருகில் எனில் ஏலகிரியில் ஒளி மாசு குறைவு. அதேபோல வாணியம்பாடி ஆலங்காயம் அருகே உள்ள காவலூரில் வைணு பாப்பு விண்வெளி ஆய்வகம் இருக்கிறது. இங்கும் ஒளி மாசு குறைவுதான். இந்த இடங்களிலிருந்து பார்த்தால் விண்கல் மழையை முழுமையாக ரசிக்க முடியும்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications