விரல் நகத்தை வச்சே.. உங்களுக்குள் மறைந்து இருக்கும் கேரக்டரை கண்டுபிடிச்சிடலாம்.. ரெடியா?
சென்னை: உங்கள் விரல் நகம் எப்படி இருக்கிறது என்பதை வைத்து உங்க கேரக்டரை கண்டுபிடிச்சிடலம்... உங்கள் பலம் என்ன, பலவீனம் என்ன? நீங்கள் தலைமை பண்பு மிக்கவரா? படைப்பாற்றல் கொண்டவரா என்பதையும் கண்டுபிடித்துவிடலாமாம்...
உங்கள் விரல் நகத்தை வச்சே உங்க கேரக்டர் எப்படி இருக்கும்னு கண்டுபிடிச்சிடலாம்.. அதெப்படி முடியும் என்று ஆச்சரியத்துடன் பார்ப்பது புரிகிறது. ஆனால், நமது விரல் நகத்தின் அளவை வைத்து உங்களுக்குள் மறைந்து இருக்கும் சில பண்புகளை ஓரளவு கணித்து விட முடியும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

நாம் அனைவருக்கும் விரல்கள் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. சிலருக்கு நீளமானதாக இருக்கும்.. சிலருக்கு நகங்கள் நீளம் குறைவானதாகவும் அகலமானதாகவும் இருக்கும். இப்படி மாறுபட்ட விரல் நகங்களுக்கும் ஒருவரின் குணாதிசயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் சில ஆய்வுகள் சொல்லியிருக்கிறதாம். சரி.. இங்கே விஷயத்திற்கு வரலாம்..
உங்கள் விரல் நகம் எப்படி இருக்கிறது என்பதை வைத்து உங்க கேரக்டரை கண்டுபிடிச்சிடலாம்.. உங்கள் பலம் என்ன, பலவீனம் என்ன? உங்களோட பிஹேவியர், மைண்ட்செட் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் ஓரளவு கண்டுபிடிச்சிடலாமாம்..

நீளமான நகம் (long Nail shape):
உங்கள் விரல் நகம் செங்குத்தாக நீளமாக இருந்தால்.. நீங்கள் கற்பனைத்திறன் மிக்கவராகவும், கிரியேட்டிவிட்டி கொண்டவராகவும் இருப்பீர்கள். எதையும் சிறப்பானதாக செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மற்றவரை கவர்ந்திழுக்கும் நபராக இருப்பீர்கள். இதனால், உங்களுக்கு நண்பர்கள் அதிகம் கிடைப்பார்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் முழு விவரத்தோடு தெரிந்து கொள்ள வேண்டும் என கருதுவீர்கள். அமைதியாக இருப்பதே உங்களுக்கு பிடித்தமான விஷயம். சுதந்திரமாகவும் எதார்த்தாமாகவும் இருக்க வேண்டும். உங்களுக்கு இடது மூளையை விட வலது மூளையே அதிகம் ஆதிக்கம் கொண்டதாக இருக்கும். எனவே கிரியேட்டிவ் மிக்க நபராக இருப்பீர்கள். எதை செய்தாலும் அதில் ஒரு தனித்துவம் காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பிராக்டிக்கலாக அணுகி அதற்கான தீர்வை கண்டுபிடித்து விடுவீர்கள். நாம் செய்யும் காரியத்தில் குறை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அதிக மெனக்கெடுவீர்கள். சிறிய விஷயத்திலும் கூட அதிக கவனம் செலுத்துவீர்கள். அமைதியான நபராக இருந்தாலும் கோபம் வந்தால் ஆக்ரோஷமான நபராக மாறிவிடுவீர்கள்.

அகலமான நகம்: உங்கள் நகம் அகலமானதாக இருந்தால்... நீங்கள் வெளிப்படத்தன்மை மிக்கவராக இருப்பீர்கள். திறந்த மனதுடன் இருப்பதால், உங்களுக்கு நட்பு வட்டாரம் அதிகம் இருகும். பொறுப்புணர்வு மிக்கவராக செயல்படுவீர்கள். இந்த விஷயத்தை நாம செய்து இருக்கிறோம்.. என்றால் அதற்கு என தனி ஒரு மதிப்பு இருக்க வேண்டும் என கருதும் நபராக இருப்பீர்கள்.
இதற்காக முடிந்த அளவுக்கு கடுமையான உழைப்பீர்கள். இயற்கையாகவே உங்களுக்கு தலைமைப்பண்பு இருக்கும். இதனால், எவ்வளவு பெரிய டாஸ்க் என்றாலும் ஈசியாக முடித்து விடுவீர்கள். நேரத்தை சரியாக கையாள்வீர்கள் இதுவே உங்களில் பெரிய பிளஸ் ஆக இருக்கும். புதிய ஐடியாக்களை யார் சொன்னாலும் காது கொடுத்து கேட்பீர்கள். ஈசியாக யாரிடமும் பழகும் தன்மை உங்களுக்கு இருக்கும்.
இதனால் பிறரை எளிதாக உங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். கோபமோ,, அழுகையோ.. சிரிப்போ.. எதையும் வெளிப்படையாக காட்டிக்கொள்ள தயங்க மாட்டீர்கள். நீங்கள் அதிக எமோஷனல் மிக்க நபராக சிலர் உங்களை பார்ப்பார்கள். அதுவே உங்களின் பலமாகவும் இருக்கும்.
விரல் நகத்தை வைத்து ஒருவரின் கேரக்டரை கண்டுபிடித்து விடலாம் என்பதை சில ஆய்வுகள் நிரூபித்து இருப்பதாக சொல்லப்பட்டாலும் கூட இது, ஜாலியான பொழுது போக்கு விஷயமே என்பதும் சில நிபுணர்களின் வாதமாக இருக்கிறது..
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications