நீங்கள் எப்படிப்பட்டவர்? ஆள்காட்டி விரல் சொல்லும் ரகசியம்.. அடடா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
சென்னை: ஒருவரின் கேரக்டரை அவர்களின் விரலை வைத்தே கணித்து விட முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் இது உண்மை உங்களின் ஆள்காட்டி விரல் ஒன்றே போதும். நீங்கள் யார்? எப்படிப்பட்ட பண்புகளை கொண்டிருப்பீர்கள்? என்று கூறி விட முடியுமாம். வாங்க உங்களின் ஆள்காட்டி விரலை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? என்பதை இந்த செய்தியில் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
பூமியில் மனிதராக பிறந்த நாம் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. உதாரணமாக ஒவ்வொருவரின் உடலமைப்பு, குணம் என்பது மாறுபட்டு உள்ளது. இந்நிலையில் தான் ஒருவரின் கேரக்டர், அவர்களின் எதிர்காலம் உள்ளிட்டவற்றை கைரேகை மூலம் சிலர் கணிப்பது உண்டு.

அந்த வகையில் கை விரலை வைத்தே ஒருவரின் கேரக்டரை சொல்ல முடியுமாம். அதாவது ஒருவர் எந்த மாதிரியான குணத்தை கொண்டவர்? அவர் எப்படி சிந்திப்பார்? என்பதை ஆள்காட்டி விரல் காட்டி கொடுத்து விடுமாம். இதை நாங்கள் சொல்லவில்லை. மாறாக ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது fascinating realm of body language and personality traits அடிப்படையிலான ரிசர்ஜ் ஆய்வு தான் ஒருவரின் உடல்மொழி, விரலை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிக்காட்டி உள்ளது. இந்த ஆய்வின் மூலம் விரல் மூலம் ஒருவரின் வேலை, உறவு முறை, பணத்தை கையாளும் திறன் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது விரலின் 3 வகையான வடிவங்களின் அடிப்படையில் ஒருவரின் குணம் எப்படி இருக்கும்? என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலில் நாம் பார்ப்பது Straight. அதாவது உங்களின் ஆள்காட்டி விரலை நீட்டிப்பாருங்கள். அந்த விரல் வளையாமல் நேராமல் இருக்குமேயனால் (படத்தில் இருப்பது போன்று) இது உங்களுக்கு தான். அதாவது நேரான விரல் கொண்டவராக நீங்கள் இருந்தால் நீங்கள் மிகவும் நம்பகத்தன்மை கொண்ட நபராக இருப்பீர்கள். உங்களின் நண்பர்கள், குடும்பத்தினர் உங்களிடம் அடிக்கடி ஆலோசனைகளை கேட்கலாம். அதேவேளையில் நீங்கள் ரகசியம் காக்கும் நபராக இருப்பீர்கள். உங்களை பற்றி கூட அதிகமாக வெளியே சொல்ல விரும்புவது இல்லை.

வாழ்க்கையில் எப்போதும் போலியான செயல்களை தவிர்ப்பீர்கள். பொய் சொல்வதை விரும்பமாட்டீர்கள். யாரிடமும் காரியம் ஆக வேண்டும் என்றுஒருபோதும் நடிக்க மாட்டீர்கள். வாழ்க்கை முழுவதும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க நினைப்பீர்கள். வேலையில் உங்களுக்கான பணிகளை நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவுகளை பொறுத்தமட்டில் நீங்கள் விசுவாசமிக்கவராக இருப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையால் அதிகமானவர்கள் நெருங்கி பழகலாம். இதனால் நட்பு வட்டாரம் என்பது அதிகமாக இருக்கலாம். நம்பகமான கூட்டாளியாக்குகிறீர்கள். பண விஷயத்தை பொறுத்தமட்டில் கவனமாகவும், அதேநேரத்தில் வேகமாக சம்பாதிப்பதற்கான வழிகளை தேடுவீர்கள். சேமிப்பை விரும்புவீர்கள். உங்களின் சம்பளத்துகு ஏற்ப நல்ல முதலீடு திட்டத்தை வைத்திருப்பீர்கள்.
இரண்டாவதாக நாம் பார்ப்பது Pointed finger (படத்தில் இருப்பது போல்). இப்படி உங்களின் விரல் இருந்தால்
நீங்கள் எப்போதும் தனித்துவமாக யோசிப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மற்றவர்களை விட புத்திசாலித்தனமாக மாற்றி யோசிப்பீர்கள். அவுட் ஆப் பாக்ஸ் சிந்தனை கொண்டவராக இருப்பீர்கள். உங்களிடம் கற்பனை திறன் அதிகம் இருக்கும். அடிக்கடி புது முயற்சிகளை கையில் எடுப்பீர்கள். மற்றவர்களுக்கு புதிய யோசனைகளை வழங்கவீர்கள். ஒரே மாதிரியான பணி உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். சவால் நிறைந்த பணிகளை கொடுத்தால் நிச்சயம் அதனை செய்து முடிப்பீர்கள்.

மற்றவர்களின் நம்பிக்கைக்குரிய நபராக இருப்பீர்கள். லீடர்ஷிப் ரோல்ஸ் உங்களை அடிக்கடி தேடிவரும். உறவுகளை பொறுத்தமட்டில் சிறப்பாகவே இருக்கம். சுவாரஸ்யமாக வாழ முயற்சிப்பீர்கள். பண விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கும் நபராக இருக்கிறார். புதிய முயற்சி என்று பணத்தை இழக்கலாம். இதனால் மனச்சோர்வுக்கு ஆளாகலாம். அதேவேளையில் தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து முதலீடு செய்யும்போது நீங்கள் நிச்சயம் லாபம் அடைவீர்கள்.
3வதாக நாம் பார்ப்பது Knuckled Finger Shape (படத்தில் இருப்பது போல்). நீங்கள் சாவல்களை எதிர்கொண்டு ஜெயிக்கும் நபராக இருப்பீர்கள். வாழ்க்கை என்பது கடினமானதாக இருந்தாலும் கூட அதில் வெற்றி பெற்று முன்னேறுவீர்கள். வாழ்க்கையில் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கலாம். இதனால் எந்த சூழலும் உங்களை சோர்வடைய வைக்காது. அதேவேளையில் ஏற்றத்தாழ்வுகளை அடிக்கடி சந்திப்பதால் நல்ல உறுதியான குணம் படைத்தவராக இருப்பீர்கள்.

விடா முயற்சி, கடினமான சூழலிலும் விட்டு கொடுக்காத பண்பு உங்களின் வாழ்க்கையை மேம்படுத்தலாம். இதனால் பலருக்கும் உத்வேகம் அளிக்கும் நபராக இருக்கலாம். வேலையில் பிரச்சனைகளை தீர்க்கும் குணம் கொண்டவராகவும், உறவுகளை பொறுத்தவரை விசுவாசமிக்கவராக காணப்படுகவீர்கள். நேர்மையை மதிப்பீர்கள். அதேவேளையில் ஏதேனும் பிரச்சனை வந்தாலும் கூட நேருக்கு நேர் நின்று சந்திக்க பயப்படமாட்டீர்கள். பணம் சம்பாதிக்க சில தியாகங்களை கூட செய்ய தயாராக இருப்பீர்கள். பின்னடைவை சந்தித்து முன்னேற்றம் காண்பதால் பாதுகாப்பான எதிர்காலம் நிச்சயம் உண்டு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications