Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்போனை எப்படி யூஸ் பண்ணுவீங்க.. உங்களோட சீக்ரெட் கேரக்டர் எப்படி இருக்கும்? தெரிஞ்சுக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் செல்போன் பயன்படுத்தும் விதத்தை வைத்தே உங்களின் குணாதிசயத்தை கூறிவிட முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஒருவர் செல்போனை கையில் பயன்படுத்தும் விதத்தை வைத்தே அவரது கேரக்டரை ஓரளவு கணித்து விடலாம் என்று சொல்கிறார்கள்.. நீங்கள் எப்படி செல்போன் பயன்படுத்துவீர்கள்.. என்பதை வைத்து உங்களின் கேரக்டர் எப்படி இருக்கும் என தெரிஞ்சுக்கலாம் வாங்க..

செல்போன் தற்போது ஆறாம் விரலை போல ஒவ்வொருவரின் கைகளிலும் தவழ தொடங்கியுள்ளது. செல்போன் பயன்படுத்தாத நபரை பார்ப்பதே அரிது என்று ஆகிவிட்டது.. இப்படி மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்து விட்டது செல்போன். அனைவரும் செல்போன் பயன்படுத்தினாலும், செல்போனை கைகளில் வைத்து அனைவரும் ஒரே மாதிரியாக பயன்படுத்துவது இல்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்துகிறார்கள். இப்படி செல்போன் பயன்படுத்தும் விதத்தை வைத்தே ஒருவருடைய கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை ஓரளவு கணித்துவிடலமாம்..இது பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்..

optical illusion offbeat puzzle general knowledge

* ஒரே கையில் வைத்து ஒரு கட்டை விரலால் ஸ்க்ரோல் செய்தால்: ஒரே கையில் போனை வைத்துக்கொண்டு கட்டை விரலால் போனை பயன்படுத்துபவரா நீங்கள்... உங்கள் கேரக்டர் இப்படி பின்வருமாறு இருக்க வாய்ப்பு உள்ளதாம்... மிகுந்த நம்பிக்கை கொண்ட நபராகவும் எளிதில் எதற்கும் அலட்டிக்கொள்ளாத நபராகவும் இருக்க வாய்ப்பு உள்ளதாம். எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் உறுதியாகவும் நிதானமாகவும் அணுகுவீர்கள்..

எதையும் பெரிதாக போட்டு அலட்டிக்கொள்ளாமல் டேக் இட் ஈசி பாலிசியுடன் செயல்படும் நபராக இருக்க கூடும். நகைச்சுவை உணர்வு மிக்க நபராகவும் இருக்க கூடும். உற்சாகத்துடன் செயல்படும் தன்மை கொண்டவர் என்பதால் உங்களுடன் விரும்பி பழகுவார்கள்.

ரிஸ்க் எடுப்பதில் ஆர்வம் மிக்க நபராக இருப்பீர்கள்.. பொறுமையற்ற நபராகவும் இருக்க கூடும். உங்கள் பலம் என்னவென்று பார்த்தால்,.. தன்னம்பிக்கை, சுய சார்பு, சுதந்திரமாக செயல்படுதல், பன்முகத்திறமை, ரிஸ்க் எடுக்க தயங்காதது ஆகியவற்றை சொல்லலாம். பலவீனம் என்றால்.. பொறுமையின்மை, அஜாக்கிரதை ஆகியவற்றை சொல்லலாம்.

optical illusion offbeat puzzle general knowledge

* இரு கைகளில் வைத்து ஒரு கட்டை விரலால் ஸ்க்ரோல் செய்தால்: இரு கைகளாலும் போனை பிடித்துக் கொண்டு கட்டை விரலால் போனை பயன்படுத்தும் நபர்களா நீங்கள், மிகவும் எச்சரிகையுடன் செயல்படும் நபராகவும் ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும் என்றும் மெனக்கடுவீர்கள்.. எந்த ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வீர்கள்..

எதார்த்தமான சிந்தனை கொண்ட நபராக நீங்கள் இருப்பீர்கள்.. எந்த ஒரு காரியத்தை செய்தாலும் உறுதித்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் செயல்படுவீர்கள்.. இருந்தாலும் எதையும் உறுதியாகவும் ஒரு கால்குலேஷனுடனும் செயல்படும் விதமானது கொஞ்சம் மெதுவாக செயல்படும் நபர் போன்றொ துணிச்சலுடன் செயல்பட தயங்குபவராகவோ உங்களுக்கு காட்டும்.

உங்களின் பலம் என்றால்.. எதார்த்தமாக செயல்படுதல், அபார கவனிப்புத்திறன், ஷார்ப் நபரக இருப்பது உள்ளிட்டவற்றை சொல்லலாம்.. பலவீனம் என்று பார்த்தால்.. அதீத எச்சரிக்கையுடன் இருப்பது.. வசதியான இடத்தை விட்டு வெளியே வர தயங்குவது ஆகியவற்றை சொல்லலாம்..

optical illusion offbeat puzzle general knowledge

* இரு கைகளிலும் வைத்து இரு கட்டை விரலால் ஸ்க்ரோல் செய்தால்: இரண்டு கைகளாலும் போனை பிடித்துக் கொண்டு இரண்டு கட்டை விரல்களாகும் ஸ்கோர்ல் செய்யும் பழக்கம் கொண்டவர்கள் பின்வருமாறு இருக்க சான்ஸ் உள்ளதாம்... எந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக எடுக்கும் நபராகவும் திட்டமிட்டு செயல்படும் நபராகவும் இருக்க கூடும். நேரத்தின் அருமையை நன்கு உணர்ந்து இருப்பீர்கள்..

தேவையற்ற பணிகளில் உங்கள் நேரத்தை செலவிடுவதில் உங்களுக்கு பிடிக்காது.. உங்கள் இலக்குக்கு பங்களிக்கும் விஷயத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.. அதிக போட்டி மிக்க பணிகளில் நீங்கள் பொருத்தமான நபராக இருப்பீர்கள். போட்ட்டி என்று வந்து விட்டால் 24 மணி நேரமும் உழைக்கும் நபராக மாறிவிடுவீர்கள்..

உங்களின் பலம் என்றால் துல்லியமாகவும் திட்டமிட்டும் செயல்படுவது நேரமேலாண்மையை கடைபிடித்து திறனுடன் செயல்படுவதை சொல்லலாம்.. பலவீனம் என்றால் அதிகப்படியான அர்ப்பணிப்பு, அனைத்திலும் பெர்பெக்ஷனுடன் இருக்க வேண்டும் எனநினைப்பது.. அதிக்கப்படியான வேலைகளை செய்தல் ஆகியவற்றை சொல்லலாம்...

optical illusion offbeat puzzle general knowledge

* ஒரு கையில் வைத்து ஆள்காட்டி விரலால் ஸ்க்ரோல் செய்தால்: ஒரு கையில் போனை பிடித்துக் கொண்டு ஆள்காட்டி விரலால்.. போனை ஸ்கோர்ல் செய்பவர்கள், எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அவசரகதியில் எடுக்கும் நபராக நீங்கள் இருக்க மாட்டீர்கள்.. தனிமையில் பணி செய்வதுதான் உங்களுக்கு பிடிக்கும். தனிமையில் இருந்தால்தான் கவன சிதறல் இல்லாமல் வேலை செய்ய முடியும் என நீங்கள் நினைப்பீர்கள்...

எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்னால் பல்வேறு ஆப்ஷன் களையும் தீர ஆய்வு செய்வீர்கள்... அதிக கற்பனை ஆற்றல் மிக்க நபராகவும் கிரியேட்டிவ் எண்ணம் கொண்டவராகவும் இருக்கலாம். விமர்சனங்களை கண்டு அஞ்ச மாட்டீர்கள்.. பிறருடைய விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள தயங்குவீர்கள்...

மனதளவில் வலுவாக இருப்பது.. கிரியேட்டிவ் திறன், ஸ்மார்ட் ஆக செயல்படுவது, முதிர்ச்சியுடன் இருப்பது ஆகியவை உங்க்கள் பலமாக இருக்கும். பலவீனம் என்றால்.. பிடிவாதம், பிறருடைய கருத்துக்களை காது கொடுப்பது கேக்காதது, சுய தனிமை ஆகியவற்றை சொல்லலாம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+