சல்லுன்னு போகலாம்! பெருங்களத்தூர் தாண்டுறது ரொம்ப ஈசி.. மேம்பாலம் திறப்பால் வாகன ஓட்டிகள் உற்சாகம்
சென்னை: ரூ.155 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெருங்களத்தூர் மேம்பாலம் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டதால், போக்க்குவரது நெரிசல் கணிசமாக குறையும் என்பதால் வாகன ஓட்டிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சென்னையின் புறநகர் பகுதியில் முக்கிய இடங்களில் ஒன்றாக பெருங்களத்தூர் உள்ளது. கிட்டத்தட்ட சென்னை சிட்டிக்குள் வருவதற்கான நுழைவுவாயில் போல அமைந்து இருக்கும் பெருங்களத்தூரை கடந்துதான் தமிழகத்தின் தெற்கு, மேற்கு பகுதி மாவட்டங்களுக்கு செல்ல முடியும்.

பெருங்களத்தூர்: சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் செல்லவும், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் செல்லவும் ஜிஎஸ்டி சாலையில் தான் போக வேண்டும். தமிழ்நாட்டின் 80 சதவீதம் மக்கள் ஜிஎஸ்டி சாலை வழியாகவே சென்னையை கடந்து வெளியே போகும் நிலை உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் பெருங்களத்தூரை தாண்டுவதற்குள் வாகன ஓட்டிகள் படாத பாடு பட்டு விடுவார்கள்.
மேம்பாலம் திறக்கப்பட்டது: புறநகர் மதுர வாயல் வழியாக வந்தால் கூட பெருங்களத்தூருக்கு வந்தே சேரும். இதனால் வெளியூர் செல்லும் பேருந்துகள், வேன்கள், கனரக வாகனங்கள் ஆகியவற்றால் பெருங்களத்தூர் திக்கு முக்காடிப்போகும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பெருங்களத்தூரை கடந்து செல்கின்றன. எனினும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்த பிறகு பெருங்களத்தூரில் டிராபிக் சற்று குறைந்து இருக்கிறது.
இருந்தாலும், வழக்கமான வாகனங்கள் எண்ணிக்கை முன்பைவிட அதிகரித்துள்ளது. கிளாம்பாக்கம் வரை காரில் சென்று உறவினர்களை வழியனுப்புவது அதிகமாகி உள்ளது. அதேபோல கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளும் பெருங்களத்தூர் வழியாகவே செல்கின்றன. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் வாகன நெரிசல் குறையவில்லை..
150 கோடி மதிப்பீடு: இந்த நிலையில் தான், பெருங்களத்தூரில் கடந்த சில ஆண்டுகளாக கட்டுப்பட்டு வந்த மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 150 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதன் மூலம் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்பாலத்தில், சென்னை - செங்கல்பட்டு பாலப்பகுதியில் நீளம் 743 மீட்டராக உள்ளது.
சென்னைவாசிகள் மகிழ்ச்சி: சீனிவாச ராகவா தெரு பாலப்பகுதியின் நீளம் 452 மீட்டர் ஆகும். தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பாலப்பகுதியின் நீளம் 354 மீட்டர் ஆகும். பெருங்களத்தூர் பகுதியில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு இந்த புதிய பாலத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்பதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல தென் மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications