கொலை செய்து 2 மாசமாச்சு.. இன்னும் கிடைக்காத தலை.. பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தியாவின் உடல்
சந்தியாவின் உடல் பாகங்கள் அவரது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
சென்னை: கொலை பண்ணி இரண்டரை மாசம் ஆச்சு.. சந்தியாவின் தலை கிடைக்கவே இல்லை.. எவ்வளவு தேடியும் தலை கிடைக்காத நிலையில், அவரது மற்ற உடல் பாகங்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன.
தமிழகத்தையே நடுங்க வைத்தது பெருங்குடி கொலை! நாகர்கோவிலை சேர்ந்த சந்தியா என்ற பெண் நம்மால் கற்பனையே பண்ண முடியாத அளவுக்கு மிக கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்!
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணன்தான் கொலையாளி என்பது நிரூபணமானது.

உடல் பாகங்கள்
பின்னர் அவர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் சந்தியாவின் உடல் பாகங்கள் ஒவ்வொரு பகுதியில் வீசப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஒவ்வொரு இடங்களிலும் தேடியலைந்து, சந்தியாவின் உடல் பாகங்களான இடுப்பு பகுதி, கை, கால்கள் கிடைத்தன. ஆனால் தலை கிடைக்கவே இல்லை.

போலீசார் கடும் முயற்சி
சந்தியாவின் தலை எங்கே என்பதை கண்டுபிடிக்க போலீசாரும் அதிக சிரமம் எடுத்து கொண்டனர். ஆனால் இரண்டரை மாதங்களாகியும் சந்தியாவின் தலை மட்டும் கிடைக்கவே இல்லை. ஏனெனில் தலை இருந்தால்தான் கொலை செய்யப்பட்டது சந்தியா என்பது முழுதாக அறிய முடியும்.

உடல் பாகங்கள்
அதனால் தலை கிடைக்காததால், கிடைத்த உடல் பாகங்களை வைத்து டிஎன்ஏ டெஸ்ட் செய்தால், அதன்மூலம் கொலை செய்தது சந்தியா என்பது தெரியவரும் என்று சொல்லப்பட்டது.

சொந்த கிராமம்
இந்த நிலையில், சந்தியாவின் உடல் பாகங்களை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். இன்று சென்னை வந்த அவர்களிடம் உடல் பாகங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து சந்தியாவின் சொந்த கிராமத்தில் உடல் பாகங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

டிஎன்ஏ டெஸ்ட்
ஆனால் "இவ்வளவு நாள் ஆகியும் ஏன் இன்னும் டிஎன்ஏ சோதனை செய்யப்படவில்லை" என்பது சந்தியா குடும்பத்தினர் கேள்வியாக உள்ளது. கோர்ட் அனுமதி கிடைத்ததும் சோதனை முறையாக நடத்தப்படும் என்பது போலீஸ் தரப்பின் விளக்கமாக உள்ளது! ஆனால் கடைசி வரை சந்தியாவின் தலையை கண்டுபிடிக்கவே முடியவில்லை!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications