பெருங்குடி டூ துரைப்பாக்கம்.. OMR ரூட்டில் புதிய ரூல்.. அப்ப 27.34 km சாலை? சென்னையில் டபுள் மாற்றம்
சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் தினமும் பயணம் செய்பவர்களுக்கு இப்போது சில மாற்றங்கள் வந்துள்ளன.. பெருங்குடி, துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிகளில் அதிகரித்து வரும் டிராபிக்கை சமாளிக்க, சில முக்கிய இடங்களில் யூடர்ன் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சென்னையை சுற்றி உருவாகி வரும் மிகப்பெரிய புறவெளி வட்டச்சாலை திட்டத்தின் இறுதிக்கட்டத்திலும் இப்போது ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த டபுள் மாற்றத்தை பற்றியும் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
ஓஎம்ஆர்-ல் அதிகளவில் ஐ.டி. நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், காலை, சாயங்காலம் நேரங்களில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால்தான் டிராபிக்கை முறைப்படுத்தும் வகையில் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சென்னை ஓஎம்ஆர் சாலை
துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம், பிள்ளையார் கோவில் தெரு வழியாக சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் இனி அங்கு யூ-டர்ன் எடுக்க முடியாது... பெருங்குடி சுங்கச்சாவடி இருந்த பகுதி வரை சென்று அங்கிருந்து திரும்ப வேண்டும்.
200 அடி ரேடியல் சாலையிலிருந்து சோழிங்கநல்லூர் நோக்கி செல்லும் வாகனங்களுக்கும் மாற்றம் உள்ளது. சீவரம் அருகே யூ-டர்ன் எடுக்க முடியாது. அந்த வண்டிகளும் பெருங்குடி செக்போஸ்ட்டிலிருந்த பகுதிக்கு சென்று திரும்ப வேண்டும்... கந்தன்சாவடியில் இருந்து எஸ்.ஆர்.பி. டூல்ஸ் செல்லும் வாகனங்கள் உலக வர்த்தக மையம் அருகே யூ-டர்ன் செய்யாமல், பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்று திரும்ப வேண்டும்.
பெருங்குடி, துரைப்பாக்கம்
அதேநேரம், பெருங்குடி, சீவரம் பகுதியில் இருந்து 200 அடி ரேடியல் சாலை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடு இல்லை... அவை வழக்கம்போல் யூ-டர்ன் எடுத்துக்கொள்ளலாம். ஓஎம்ஆர் பகுதியில் நெரிசலை குறைத்து வாகனங்களை சீராக இயக்குவதே இந்த மாற்றங்களின் நோக்கம் என்று டிராபிக் போலீசார் சொல்கிறார்கள்..
சென்னை புறவெளி வட்டச்சாலை திட்டம்
இதனிடையே, சென்னையின் புறநகர் போக்குவரத்துக்கு எதிர்காலத்தில் முக்கியமானதாக பார்க்கப்படும் சென்னை புறவெளி வட்டச்சாலை திட்டத்திலும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் சுமார் 133 கி.மீ. நீளத்தில் உருவாக்கப்பட்டு வரும் இந்த திட்டத்தின் இறுதிப்பகுதியான சிங்கபெருமாள் கோவில் முதல் பூஞ்சேரி வரையிலான 27.34 கி.மீ. சாலைப் பணிகளுக்கான டெண்டர்கள் இப்போது திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த பகுதி ஜிஎஸ்டி சாலை, NH-48, NH-332A, ஈசிஆர் சாலையை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் டபுள் மாற்றம்
இந்த இறுதிக்கட்ட சாலை மட்டும் அமைந்து விட்டால், சென்னைக்குள் நுழையாமலேயே முக்கிய சாலைகளுக்கு இடையே செல்லும் மாற்று வழி கிடைத்து விடும்.. 6 வழி பிரதான சாலையுடன் 2 பக்கமும், தலா 2 வழி சேவைச் சாலை என மொத்தம் 10 வழித்தட வசதியுடன் இதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெருமாள் ஏரி பகுதியில் 1.8 கி.மீ. உயர்மட்ட சாலையும், பல கீழ்ப்பாலங்கள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளும் இதில் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில், Section-V-ன் கீழ் சிங்கபெருமாள் கோவில்-பூஞ்சேரி பணிகளுக்காக அழைக்கப்பட்ட டெண்டர்களில் 3 தொகுப்புகள் செப்டம்பர் 17-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ பதிவுகளில் இதற்கான காரணமாக நிர்வாக ரீதியான காரணங்கள் அல்லது சிக்கல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதற்காக திட்டம் கைவிடப்பட்டது என்று சொல்லிவிட முடியாது.. அடுத்தகட்டமாக புதிய டெண்டர் எப்போது வெளியிடப்படும் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது..!!


Click it and Unblock the Notifications
