சென்னையில் 10வது நாளாக பெட்ரோல் டீசல் விலை சரசரவென உயர்வு.. 80 ரூபாயை தாண்டியது பெட்ரோல்!
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10வது நாளாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா முடக்கத்தால் 12 வாரங்கள் பெட்ரோல் டீசல் விலை தினசரி மாற்றப்படாமல் இருந்தது. ஆனால் அண்மையில் வழக்கம் போல் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது முதல் 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.
Recommended Video
குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை கடந்த ஜூன் 8ம் தேதி முதல் தினமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று காலை 6 மணி முதல், பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 பைசா மற்றும் டீசல் லிட்டருக்கு 48 பைசா அதிகரித்துள்ளது.

கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.5.47ம், டீசல் விலை ரூம் 5.80ம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஜூன் 16ம் தேதி நிலவரப்படி பெட்ரோல் விலை 41 பைசா உயர்ந்து 80.37க்கு விற்பனையாகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.45 பைசா உயர்ந்து 83.62 ஆக விற்பனையாகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை இன்று 0.47 பைசா உயர்ந்து 76.73 பைசாவுக்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.45 பைசா உயர்ந்து 78.55 க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு 0.48 பைசா உயர்ந்து 73.17க்கு விற்பனையாகிறது. டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 0.57 பைசா உயர்ந்து 75.19க்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் டீசல் விலை 0.51 பைசா உயர்ந்து 70.84க்கு விற்பனையாகிறது. மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு 0.54 பைசா உயர்ந்து 73.75க்கு விற்பனையாகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications