14வது நாளாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய சென்னை நிலவரம் இதுதான்
சென்னை: பெட்ரோல், டீசல் விலை 14வது நாளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 82.27 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.29 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் கால நஷ்டத்தை ஈடு செய்ய, கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு. இதையடுத்து இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட ஆயில் நிறுவனங்கள், கடந்த 7ம் தேதி முதல் தினமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று, ஒரு லிட்டர் பெட்ரோல் 81.82 ரூபாய்க்கும் டீசல் 74.77 ரூபாய்க்கும் விற்பனையான நிலையில் இன்று, ஒரு லிட்டர் பெட்ரோல் 45 காசுகள் உயர்ந்து 82.27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 52 காசுகள் அதிகரித்து 75.29 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த 14 நாட்களில், சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 6.73 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 7.07 ரூபாயும், விலை உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications