சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.. இன்றைய விலை என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.85.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாத காலமாக பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. ஆனால் இரண்டு முறை விலை சற்று குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை கடந்த 2017 முதல் தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து வந்தது. ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு வந்ததால் வாகன ஓட்டிகள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஒரு மாதமாக விலை உயரவில்லை
இதற்கிடையே சமையல் எரிவாயு விலையும் உயர்ந்து பொதுமக்களை வாட்டி எடுத்தது. கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை அதன்பின்னர் இன்று வரை ஒரு மாதத்திற்கும் மேலாக அதிகரிக்கவில்லை.

தேர்தல் காரணம்
தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுவை ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடப்பதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் உலா வந்தன. சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையில் தலா 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.77க்கும் டீசல் ரூ.86.10க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை என்ன?
நேற்றும் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது. இந்த நிலையில் இன்று பெட்ரோல் டீசல், விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.85.88-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications