சென்னையில் ரூ 99 நெருங்கியது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை.. இப்படியே போனா இனி சைக்கிள்தான் போலயே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 99-ஐ நெருங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலையை அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி அன்றாடம் எரிபொருளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த மே மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கொரோனா லாக்டவுன் நேரத்திலும் தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அல்லல்படுகிறார்கள்.

திண்டுக்கல்

திண்டுக்கல்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெட்ரோல் விலை ரூ 100 ஐ தாண்டியது. அது போல் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்தது.

இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

இந்த நிலையில் சென்னையில் இன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல்விலை ரூ 99 ஐ நெருங்கியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து ரூ98.40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் ஒரு லிட்டர் டீசலின் விலை 27 காசுகள் உயர்ந்து ரூ 92.31 காசுகளுக்கு விற்பனையாகிறது.

டீசல் விலை

டீசல் விலை

கடந்த மே மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 16 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்திலும் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதுவரை 10 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை இன்று வரை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.

வருமானம்

வருமானம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் இதுபோன்று எரிபொருள்களின் விலை தாறுமாறாக ஏறினால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+