பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை.. நேற்றைய விலை தொடர்கிறது
சென்னை: சென்னையில் இன்று ஜூன் 15ம் தேதி, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
பெட்ரோல் லிட்டருக்கு 97.69 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.92 ரூபாய் என இன்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன.

பெட்ரோல் விலை உயர்வால் இரு சக்கர வாகனங்கள், சொந்தமாக கார் வைத்திருப்போர் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் செலவீனம் ஆகிறது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் இருப்பதை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.69 ரூபாய், டீசல் லிட்டர் 91.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications