குட் நியூஸ்... சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு... இன்று என்ன விலை தெரியுமா?
சென்னை: தலைநகர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 15 பைசாவும் டீசல் விலை 13 பைசாவும் குறைந்து, விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டது

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் என நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை சதமடித்தது. இதன் காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர். மேலும், இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டது.
இருப்பினும் பிப்ரவரி மாத இறுதியில் ஐந்து மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பெட்ரோல், டீசல் விலை சில முறை குறைக்கப்பட்டது. நேற்று வரை சுமார் 15 நாட்களுக்கு சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், சென்னையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 15 பைசா குறைந்து, ரூபாய் 92.43க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் ஒரு லிட்டர் டீசல் விலை 13 பைசா குறைந்து, ரூபாய் 85.75க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் 62.88 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பல நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் தேவை பெரியளவில் குறைந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications