ஒரு வேதனை சாதனை.. தொடர்ந்து 16வது நாளாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்.. விலை பட்டியல்
சென்னை: பெட்ரோல் டீசல் விலை 16 வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 பைசாவும், டீசல் விலை 50 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் பெட்ரோல் டீசல் விலை குறைவாக இருந்த நேரத்தில் எல்லாம் அரசு கலால் வரியை உயர்த்தி வந்தது. இதனால் பெட்ரோல் டீசல் விலை பெரிய அளவில் குறையவில்லை. கொரோனா பிரச்சனைக்கு நடுவில் சிக்கி தவிக்கும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 26 பைசா உயர்ந்து 82.87 ரூபாக்கு விற்பனையாகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து 79.56க்கு விற்பனையாகிறது.
கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 பைசா உயர்ந்து ரூ.81.27க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 பைசா உயர்த்தப்பட்டு 86.66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
இதேபோல் இந்தியாவின் முக்கியமான நான்கு மெட்ரோ நகரங்களில் டீசல் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை பார்ப்போம். சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு இன்று 50 பைசா உயர்ந்து 76.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு 58 பைசா உயர்ந்து 78.85க்கு விற்பனையாகிறது. கொல்கத்தாவில் டீசல் விலை லிட்டருக்கு 53 பைசா உயர்ந்து ரூ.74.14க்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு 55 பைசா உயர்த்தப்பட்டு 77.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை பெட்ரோல் விலை இந்த 16 நாளில் ஏழு ரூபாய் 33 பைசாவும், டீசல் விலை 8 ரூபாய் 8 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை நிலவரம்
| தேதி | ஒரு லிட்டர் விலை |
| 22/6/2020 | 82.87 |
| 21/6/2020 | 82.58 |
| 20/6/2020 | 82.27 |
| 19/6/2020 | 81.82 |
| 18/6/2020 | 81.32 |
| 17/6/2020 | 80.86 |
| 16/6/2020 | 80.37 |
| 15/6/2020 | 79.96 |
| 14/6/2020 | 79.53 |
| 13/6/2020 | 78.99 |
| 12/6/2020 | 78.47 |
| 11/6/2020 | 77.96 |
| 10/6/2020 | 77.08 |
| 09/6/2020 | 77.08 |
| 08/6/2020 | 76.60 |
| 07/6/2020 | 76.07 |
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications