சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மிரட்டி பணம் பறிக்கிறாங்க".. பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய வரி விதிப்பை விமர்சித்த ப.சி!

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசின் வரி கொள்ளை என்று காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உச்சத்தை தொட்டுக்கொண்டு இருக்கிறது. தொடர்ந்து 4வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல் விலை இன்று 35 பைசா அதிகரித்தது. டீசல் விலையிலும் இன்று 35 பைசா அதிகரித்தது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்கிறதோ இல்லையோ இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கழுத்தில் சங்கிலி.. கொடுமைப்படுத்தப்பட்ட 45 நாய்கள்.. கொடூர மரணம்.. சென்னை ஐஐடிக்கு எதிராக புகார்! கழுத்தில் சங்கிலி.. கொடுமைப்படுத்தப்பட்ட 45 நாய்கள்.. கொடூர மரணம்.. சென்னை ஐஐடிக்கு எதிராக புகார்!

சென்னை

சென்னை

சென்னையில் இன்று பெட்ரோல் 103.01 ரூபாய்க்கும், டீசல் 100.71 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது டெல்லியில் பெட்ரோல் 105.39 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் 94.95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை 101.97 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 102.36 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மும்பை

மும்பை

மும்பையில் பெட்ரோல் விலை 111.51 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 102.53 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கும் பெரு நகரங்களில் ஒன்றாக மும்பை உள்ளது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசின் கொள்ளை என்று காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Recommended Video

    வரலாறு காணாத உச்சம் தொட்ட டீசல் விலை: அச்சத்தில் வாகன ஓட்டிகள்!
    விமர்சனம்

    விமர்சனம்

    நாம் வாங்கும் பெட்ரோல் விலையில் மூன்றில் ஒரு பங்கு பெட்ரோல் விலை மத்திய அரசின் வரி மூலம் ஏற்படும் விலை ஆகும். ஒரு பொருள் விற்பனையில் 33 சதவிகிதம் வரி என்பது பணம் பறித்தல் ஆகும். மிரட்டி பணம் பறிப்பதற்கு சமமானது இது. உதாரணமாக நாம் இப்போது பெட்ரோல் வாங்க 102 ரூபாயை 1 லிட்டருக்கு கொடுக்கிறோம் என்றால் அதில் 42 ரூபாய் எண்ணெய் நிறுவனங்களுக்கு செல்லும்.

    ப. சிதம்பரம்

    ப. சிதம்பரம்

    33 ரூபாய் மத்திய அரசுக்கு இதில் நாம் வரியாக செலுத்துகிறோம். 24 ரூபாயை மாநில அரசுகளுக்கு வரியாக செலுத்துகிறோம். 4 ரூபாயை டீலர்களுக்கு செலுத்துகிறோம். 102 ரூபாய் பெட்ரோலில் 33 ரூபாய் என்பது மிக மோசமான வரி விதிப்பு முறை. என்னை பொறுத்தவரை மிரட்டி பணம் பறிப்பதற்கு இது சமமானது என்று ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

    English summary
    Petrol, diesel price in India: Union Govt tax is an extortion says Congress MP P Chidambaram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X