சைலண்ட்டாக அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை - மக்கள் தலையில் விடியும் சுமை
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்த நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
Recommended Video

தமிழக சட்டசபைத் தேர்தலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய திமுக, வரும் மே.7ம் தேதி, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைக்கிறது.
159 இடங்களில் திமுக கூட்டணியும், 75 இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றிப் பெற்றுள்ளன. தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்க, வலிமையான எதிர்க்கட்சியாக சட்டப்பேரவை செல்கிறது அதிமுக. இன்று (மே.5) காலை 10 மணிக்கு ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க.ஸ்டாலின். மே 7ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடக்கும் எளிய விழாவில் அவர் தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார்.

தொடரும் விலையேற்றம்
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா ஊரடங்கு ஒருபக்கம், சட்டமன்ற தேர்தல் ஒருபக்கம் என்ற சூழலில், மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

குறைக்கப்பட்ட விலை
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பிருந்து, விலை ஏற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மாறாக தேர்தல் நடைபெற்ற காலமான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 4 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.

19 காசுகள் உயர்வு
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.55 ரூபாய், டீசல் லிட்டர் 85.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 17 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், இன்று பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.70 ரூபாய்க்கும், டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.

தொடர்ந்து அதிகரிப்பு
தேர்தல் முடியும் வரை சைலண்ட் மோடில் இருந்த பெட்ரோல், டீசல் விலை நிலவரம், இப்போது மீண்டும் தினமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இத்தனை நாட்கள் விலை ஏற்றப்படாததன் சுமையை, அடுத்தடுத்து விலை ஏற்றி சரி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications