சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்.. டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை
பெட்ரோல் டீசல் விலை நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது
சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.
இதற்கிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.
இதையடுத்து, சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே பெட்ரோல் விலை குறையாமல் உள்ளது.. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கத்தில் உள்ளனர்.. இந்தியாவின் பெரும்பாலான நகரங்களிலும் இதே நிலைமைதான்.. கடந்தசில நாட்களாகவே பெட்ரோல் விலை டேராடூன், சண்டீகா், கவுகாத்தி, ராஞ்சி போன்ற நகரங்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் இருந்து வருகிறது..
கொரோனாவுக்கு பிறகு கச்சா எண்ணெயின் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்யப்படாததும் இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான காரணம் என்று சொல்லப்படுகிறது. எனினும் இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications